97 “தேடித் திரிந்தானே - சீதாதேவி - தன்னை அனுமானே ஆடிப் பறக்கின்ற காற்றும் நுழையாத அங்கக்கொத் தளந்தங்கும் இலங்கைப்பட் டணமெங்கும் - (தேடி) இடுக்குகளும் இருட் டொடுக்குகளும் இருட்டுறி அடுக்குகளும் மூலை முடுக்குகளும் பாய்ந்து” - (தேடி) (சுந்தரகாண்டம் தரு - 3) இயைபுத் தொடைச்சந்தம்:- “இராம ராவணயுத்தம் அப்புறம் மலைதாவும் அலைதாவும் கடல்தாவும் இப்புறம் செவிதாவும் புவிதாவும் கெவிதாவும் அன்று முனிவர் பயந்து கடகட என்று பரிந்து நடுங்கி விடவிட அண்டுமுகடுபி ளந்துநிலை கெட மண்டலமும் மிசை விண்டு தலைகெட அதிரமலைகளும் அதிரநிலைகளும் அதிர வெகுதிசை அதிரமழையிடி அதிர உத்திகள் அதிர மதிகதிர் அதிர உடுவினம் அதிர இப்படி ராகவனுக்கும் ராவணனுக்கும் நடந்ததே சண்டை” (யுத்தகாண்டம் சரணத்தில் ஒன்று தரு - 80) இயைபுத் தொடைநயம்:- “மாணிக்க தீபங்கள் ஏற்றினார் - நல்ல வாடைகள் தூரிகள் தீற்றினார் ஆணிப் பொன்னாடைகள் சாத்தினார் - பன்னீர் ஆலைத் தெருவெங்கும் ஊற்றினார் சந்தனத்தைக் கோலம் தீட்டினார் - பஞ்ச தருவையும் நன்றாக நாட்டினார் சுந்தர பாலிகை கூட்டினார் - நறுந் தூபமும் தீபமும் காட்டினார்” (பாலகாண்டம் திபதை - 2) |