பக்கம் எண் :

10

வந்து பெருஞ் சண்டை செய்ய சாமி ராவணன் பத்துச் சிரத்தையும்
விந்தை அம்பு கொண்டு கொய்யக் கொய்ய மீண்டும் மீண்டும்!
                                         முளைக்க அவ்

வேளையிலே இதமாக பிராதபகு
ணாள விபீஷணன் ஓதும் உபாயத்தி

னால் இணையறு பிரம்மாஸ்திரம் அதனை விட்டு
ஆலம் அனையவிழி ராவணன் நாபியில் வைத்த

அமிர்த கலசத்துடன் முடிகள் சிதறச் செய்து
இமையவர் முனிவர்கள் படுதுயரம் ஒழித்து

இணையில் எழிற் சனகி தீயினிற் குளித்த பின்பு
துணைவன் கவிப்படை விபீஷணனும் கற்பிலங்கு

தூயசீதை தன்னொடு புஷ்பக மீதிலேறி முன்வினை முற்றிலும்
மாயவே செய்கின்ற மகத்துவமான சேது அண்டையில் ஒப்பறு

மாதேவற் கன்று நீராட்டி இறைஞ்சி திரும்பிமுன் வந்த வழிகளை
சீதேவிக் கன்பொடு காட்டி மகிழ்ந்து நடந்து பன்னருந் தவநிலை

திகழும் பரத்துவாசன் மடத்தினிற் சேர்ந்தபின் திடத்துடன்
                                         அனுமானைப்
புகழும் பரதராசன் இடத்தினிற் கேவிட நொடிக்குள்ளே அவன் போன

     போது சாமி வரவைக் காணே னென்று பரதன்
     ஓதுந் தீயினில் விழப் போகக் கண்டு அனுமன்

மோதிரந்தந்து பதறாதே ரகுபதி வரமுனி மடம்வந்து சேர்ந்தா னென்று
ஆதரவும் சுபமும்கூறி பரதனிடம் விரைவில் விடை கொண்டு
                                             ஆஞ்சநேயன்

அக்கணம் திரும்பி லோக ரக்ஷகன் உண்ணும் வேளைக்க
அரைக் கணம் முந்திவந் தோதப்பக்ஷங் கொண்டவனைக் கூட

வைத்து வரதன் பொசித்துப் புஷ்பக மதிற்கதித்து
சத்திய பரதன் துதிக்க உத்தமகுகன் மதிக்க

தகைமை மேவிய அயோத்தி நகரில்வந்து
திகழும்மூ வுலகம் போற்ற ஒளி சிறந்த

சித்திர மிகுந்த சிங்காசன மீதினில்
அற்புதம் உற்றசெந் தேன்மொழியாள், எம

தன்னை சீதையோ டமர்ந்து பேரிகையும்
மன்னு தாளமிரு தங்க நாகசுர