பக்கம் எண் :

9

தசமுகன் அதைத் தெரிந்து இந்திரசித்தனைவிட
   வசை கொள்ளும் அவன்களம் வந்து லட்சுமணனுடன்

   வாதுசெய்ய இளையோன் அப்போது சரமாரி வெய்யன்
   மீதில் எய்ய அதனால் அப்பாதகன் திரேகம் நைய

   விண்ணில் மறைந்துதன் ஊரைச் சேர்ந்து சூது
   பண்ணி வெல்ல எண்ணி போருக்க கம்பனோடு

பாவி மகோதரனை ஏவ அவர்கள்களம்
    மேவி பலத்துடனே ராவில் அமர்புரிய

வீறும்அனுமன் தன்னால் அகம்பன் நிகும்பன் சிரங்களுருண்டபின்
சீறும் மகோதரன் கைச்சரங்கள் அழுந்திட வருந்தி இளையவன்

திகைக்கும் வேளையில் இந்திரசித்தன் அங்குவந்து சோபித
மிகுத்த பிர்மாஸ்திரம் விடுக்கத்தம்பி முதலோர் சாய்ந்திட

வித்தகஸ்ரீ ராமன்கண்டு மெத்தவும் ஆகுலங் கொண்டு
சித்தப்பிர மையாக அன்று உத்தம அனுமான் சென்று

செழித்த சஞ்சீவி பருவதத்தைக் கொண்டு வந்தபின்
பிழைத்தனைவரும் போருக் கெதிர்க்க இந்திரசித் தென்னும்

பித்தன்மாயா சீதையை வெட்டி நிகும்பலை யா
கத்தின் சாலை சேர அதைத் தெரிந் திளையவன்

கணைமழை பொழிந்தரக்கன் செய்யும் யாக மழித்து
க்ஷணமதில் அவன் சிரத்தைக் கொய்து தேவர் துதிக்கச்

சாமிபாத நேரில்வைக்க ராவணனறிந்ததன் மேலமர் செயவிட
பூமிபாரமான துஷ்ட மூலபலங்கள் ஓர் ஆயிரம் வெள்ளமும்

போரி லேறுதல் கண்டு வானர வீரரோடவே ஒன்றியாகிய
தீரராகவன் சண்டமாருதம் ஆகிநீசர்கள் பஞ்சுபோலே கெட

திவ்விய மோகனாஸ் திரம்ஏவி எங்கும் ராமனாகத்தோன்றிட
வெய்யர் யாரும் பார்க்குள் தாவி தங்களில் தாங்களே மாண்டபின்

வேதனை யேசெய்யும் ஜாதக காதக
பாதக னானம கோதரன் போர் செய்து

படையும் போய் ராகவன் கைக்கணை தன்னால் ஆவிவிண்டு
மடிய, ராவணன் துர்ச்சகுனம் மென்மேலுங் கண்டு