8 வெற்றிசேர் கும்பகர்ணனை நித்திரையில் இருந்தெழுப்பி அத்ததியில் சண்டைக்கு விடுத்திட அவன் களத்தை அடுக்க ராகவன் அம்பு தொடுக்கவே கும்பகர்ணன் நொடிக்குள் காலும் கையும்போய்படிக்குள்ளேமுண்டமாகி நொந்துபின் சாமிதனை நிந்தனை பேசி இறந்ததை ராவணன் அறிந்ததி காயனை அனுப்ப அவன் பரிசனத் திரளினொடு முனைத் தலைவர்களும் சமர்க்களம் அணுகி முச்சிரத்தன் வயமஸ்தன் கும்பன் தேவாந்தகனும் அச்சமற்ற ரண மஸ்தன் வம்பன் நராந்தகனும் அனுமான் முதலோர் கையால் மடிந்திட அதிகாயன் சினமாகி இளை யோனோ டமர் செய்துமுடிவாகச் செய்தி தெரிந்திந்திரசித்தன் தேரில்ஏறி வெய்ய சதுரங்கம் மொய்யப் போரில் வீறி விஞ்சுஞ்சுக் ரீவன் பனசன் சாம்பன் அனுமன் வஞ்ச மற்ற நீலன் முதலினோர்கள் தமையும் வாட்டக் கண்டு லட்சுமணன் தன் வில்லினிற்சரம் பூட்ட இந்திரசித்தன் ரத கஜபரி சனம் புரவி யாவற்றும் மாண்டு தானும் மிக மெலிந்து இரவில் நாகபாசத்தை ஏந்த அதனால் நொந்து இலக்குமணன் முதலோர் களத்திற்படுக்க ராமன் அக்கணம் அவ்விடம் மேவிதிகைத்து வருந்தும்வேளை அடல்சேர் கருடன்வர நாகபாசம் தெறித்து விட யாவரும் எழுந்து போரில் வீறிக்கதிக்க மிதமற்ற சேனைசூழ உக்கிரங் கொண்டுவந் தெதிர்ந்த மதம் உற்ற சூரியகேது வச்சிரதந்தன் பெரும்பக்கன் மாலிசிங்கன் பேயன் பரிதிக்கண்ணனையும் ஆலம் அஞ்சும்தீய குருதிக்கண்ணனையும் ஆர்க்குங் கவித்தலைவர் மாய்க்கராம லட்சுமணர் தாக்க மகரக்கண்ணன் அக்கினி கேதுமடிய |