பக்கம் எண் :

7

     பொற்கணை விடுத்தவனை வரச்செய்து புஜபல
     சித்திரக் கவியினங்கள் அதைக்கொடு விரைவொடு

     சேதுபந்தனஞ் செய்வித்து நீள்கடல் வளைந்திடு
     மாதிரம் பயந்திடச்செய் ராவணன் இலங்கைதன்னை

     வந்து முத்திகை செய்துகொண்டுதும்பி அங்கதன் மீதும்
     முந்து விக்ரம அனுமந்தன் அம்புயந் தன்னிலும் ஏறி

     மூதண்டம் திகில் மேவி யதிர்ந்திட
     கோதண்டந்தனில் நாணொலி கொண்டுற

     குரைகடல் வெருவிட நெடுநிலம் அதுதனை
     ஒருசுமை எனஉறும் உரகன் உடல் நெளிய

     உயர்மதி கதிர்வழி பிசகிட நெடுவரை
     அயர்தர உடுஇனம் அதுதரையில் உதிர

     அணி ரதகஜபரி பரிசன வகை மிக
     அணி அணியொடுவர அதிவலிமைகள் சொலி

     அனல் கக்கிடும் அத்திர சத்திர மழு
     கனசக்கரம் நெட்டயில் பட்டய மொடு

     கதிர் வீசும் கதிர்முத்தலை சூலம்
     கதைவார் அஞ்சிலை கைக் கொடு தாளம்

     காளஞ் சின்னந் தாரைகள் மத்தள பேரிகள் பலவித
     மேளம் பின்னும் நாக சுரத்தொடு பூரிகை ஒலிதர

     வீரராவணன் தேரில் ஏறி போர்க்களத்தில் வந்து
     சேரவே அவன்சேனை வீரர் யாரும் போரில் முந்த

     தீய வச்சிரமுஷ்டி துன்முகன் சுபாரிசன்
     மாய பிரகஸ்தன் கெட்டவன்மனங் கொள் நீசரை

     வானரவீர்கள் கொல்ல ராவணன் இவரை வெல்ல
     சானகி மணாளன் வில்லிற் சோணை மாரி என்றுசொல்லத்

     தகுஞ்சரங் களைவிட்டு அவன் தேர்வில்லை முறித்துத்
     திகழ்மணி முடிபத்தும் தரைமேல் உருளச் செய்து

     திடமொடு சண்டை செய்ய நாளைவா இன்றுபோ வென்று
     விடைதர மனம் நொந்து தனியாய்ப் போய் லங்கைசேர்ந்து