6 மொய்த்த குழற்சீதைதனைத் தேட விடுக்க அவன் உத்தமசம் பாதி தன்னால் உளவறிந்து கொண்டு ஒப்பில்லாத விஸ்வரூபங்கொண்டு மயேந்திரம் ஏறிச் செப்பமாய்க் கடலைத் தாண்டி லங்கையிற் சேர்ந்து திடமுறு லங்கணியை முதற்பலி யிட்டுச் சீதையை கடிபெறு லங்கை எங்கும் தேடிக் காணாமற் பின்பு காவல் மிகும் அசோக வனத்தில் திரிசடை யன்பு மேவக்காத் திடவட முகம் பார்த் திருக்கக் கண்டு விசையகோ தண்டராம தூதன் நான் என்று சொல்லி நசைதரும் கணையாழி கொடுத்துத் திடமுங் கூறி நாயகி சீதைதந்த சூடாமணிகைக் கொண்டு தீயகிங் கரர்எண்ப தாயிரம் பேர்களொடு செழித்த அசோக வனத்தையும் அழித்திடக் கண்டெதிர்த்த கொழுத்த ராக்ஷத சேனையோடு சம்புமாலி மிகுத்த கொடுமைசெய் பஞ்சசேனா திபர்களும் அக்ஷதனும் மடியநாற் பதுவெள்ளம் அரக்கரோ டிந்திரசித்தன் வந்துபோர் செய்யஅனு மந்தன் அந்தத்தளத்தைச் சிந்துசிந் தாக்கி இந்திர சித்தன்தேரை யழித்துச் சிலையை முறித்து முடித் தலையை உடைக்க அவன் வலிய பிரம்ம பாசத்தால் கட்டராவணனப்போ வாலில் நெருப்பையிட அந்த நெருப்பைலங்கையின் மூலைக்கு மூலையிட்டுக் கொளுத்திநீ றாக்கிவிட்டு உளமகிழ் கொண்டு மீண்டுவந்து சாமியைச் சேவித்து அளிதிகழ் சூடாமணி தரக்கொண்டு மகிழ்ந்தபின்பு அடல் மிகுந்த எழு பதுவெள்ளம் வானரப் படையும் ஒப்பிலதின் அதிபரும் நீடிய பரிவொடு தென்கடல் அருகில் நிறைந்தபின் சரணம் அடைந்துநின் துணையடி தந்தருள் சாமி என்றவிபீ ஷணன்தனக்கு லங்கா பூமிதந்து விகாதஞ் செய்தவருணண்மேல் |