5 மேவிய பரதனுக்குப் பாதுகை யளித்தபின் விரிதண்டகவன வழிகொண்டதில் அத் திரி என்றிடுதவ முனிவன் கிருபை பெற் றிட்டபின்பு விராதன் இருகையது முட்ட விண்டிடவே செய்து சரபங்க முனிவன் ஆசிரமந் தனிலே எழிற் சனகியோ டெய்தி இந்திரன் போனபின் தண்டகாரண்ய வாசிகள் படுதுயர் கண்டன் னோரிடர் தீர்தர இணையறு கருணைகொண்டே அந்த வனமதிற்பத்து வருடம் நின்று வரும் வழியிற்சுதிட்ட மாமுனி வரங்கொண்டே அகஸ்தியன் றனைக்கண்டு சேமவிற் சரங்கொண்டு துதித்தவன் றனை விண்டு சென்று சடாயுஉற வாடப் பஞ்ச வடியில் நின்று விடாதமய லோடு கெஞ்சிய பெரு நீலி சூர்ப்பணகை காதுமூக்கரிந்து கால னார்க்குநிக ராகப் போர்க்குவந்த கரதூஷணைத் திரிசிரசன் ஆதியரை அரைநாழி கைதனில் மறலி நாடதனில் அனுப்பி மானுரு வாய்வந்த மாரீ சன்கையாற் பிடித்திட வேபோன தருணங்கண் டிராவணன் தபசி போல் விரைவில் வந்து சீதையை நிலத்தினொடு மேலெடுத்துச் செல்லும் போது சடாயுவின் ஆவியினை வதைத் தசோக வனந்தனில் அரிய சிறையிலிட வேசானகி தன்னைப் பிரியும் அதிகதுயர் ஆலோசினம் பண்ணிப் பின்மதிக் கவந்தனை சொர்க்கம் ஏற்றிச்சவரி சொன்ன விதங்கொடு சுக்கிரீ வனைத் தனது சொந்தம் ஆக்கி அக்ரமமிகு வாலிதனை முந்த வாட்டி விக்ரம அனுமானை, அளி |