பக்கம் எண் :

4

தன்னிடம் லட்சுமணன் சத்துருக்கனும் கைகேசி
மின்வயிற்றிற் பரதனும் தம்பியராய் சனிக்கத்
தான்எண்ணிக் கோசலை வயிற்றிற் சித்திரைமாதம்
ஆனநவமி புனர் பூச நக்ஷத்திரநாளில்

     தசரதன் சுதனா                          உதித்து
     சந்திர விம்பமுகம் கிருபைவளர்தரு
     கின்ற கண்களும் நெடுஞ்சினை எனும்நுத
     லுக் சிறந்தபவ ளந்தனை நிகர் அத
     ரம்தகுந்த ஒளிர் குண்டலம் அணிசெவி
     களுநில வெறிகமு கினைநிகர் களமொடு
     விரைகமழ் துளவணி புயமலைகளும் நெடு
     உலகமதனையுணும் அழகிய வயிறொடு
     தாரணி மார்பும் வண்டாமரைத் தாள்களும்
     சாமள மேனியும் ராமநன் நாமமும்
     தயங்கஅரு மறையுணர் புங்கவர் மிகு
     ஜெயம் விஜயபவ எனமங் களமொடு
     தசரதன் சுதனா       உதித்து,   தனுவிற்கதித்து,
     தாடகைப் பாவியை    வதைத்து

விசுவா மித்திரனுடன் மிதிலைக்குச் செல்லும்        போது
     வேதச் சிரத்தில் நடமாடும் சீர்பாதப்          போது
இசைவுறப் பட்டளவில் அகலிகை என்னும்          மாது
     எழுந்தருள் கல்உருமாறி; அதுவல்லாமல் மண்  மீது

     இந்திர போகசன கன்வில்லை ரண்டு
     துண்ட மாஒடித்தான் அதைக் கண்டு

     சுந்தரி சீதையைத் தந்தனனே மகிழ்
     கொண்டிட வேமண மானபின்னே வரு

     கின்ற வழியதனில் பரசுராமன் வில்மு
     றிந்திட வேசெய்து சனகியோ டயோத்தி

     தந்து கூனிகல கந்தனால் அரசி
     ழந்து நீடுபுகழ் தம்பியோடு மலர்

     மங்கை சீதைபதம் நொந்து வாடிவர
     கங்கை மாநதி கடந்து வாசமலர்க்

     காவிரி தருசித்ரக் கூடபர் வதத்தில்