பக்கம் எண் :

11

வாத்தியம் ஒலிக்க வருசுரர் மருமலர்கொடு
நாற்றிசை இறைக்க வெகு முனிவர்கள் மணிமுடி

நரபதிகளும்வா னரபதிகளும் பூ
சுரர் துதிசொலவே கவரிகள் அருகே

தூயலட் சுமணனுடன் சத்துருக்கனும் வீசிட
நேயம் உற்றபரதன் உட் களித்திதம் பேசியே

நிலவெறி தருசந்திர வட்டக் குடைகவிக்க
பலமிகு அனுமந்தன் நற்றுணையடி பிடிக்க

பகர் வசிட்டனால் மகுடாபி ஷேகம் கொண்டு
செகதலத்துளோர் துதிபேசச் சேவைதந்த

தீனதயா நிதியே அடியார்உள
மேநிலையாய் நிதம் வாழ்வர தாஉயர்

வேதர் அரியணை மேவு வினோதா
தாதா சுரர் முதலோர் துதிபாதா

சதுரனே சராசரங்களைத் தருமூலா
துதி செய் ராஜசேகரன்த மிழ்க் கனுகூலா

சுமுக சுகுண சுந்தராங்க சுகிர்தநய
விமல விபவ விந்தை யோங்கிடு  மிகுஜய

     கோதண்ட தீக்ஷா குருவே - பக்தரிருதய
     கோகனக மலர் மருவே               (கோதண்ட)

           இராமாயண ஓரடிக் கீர்த்தனை முற்றிற்று