12 ஸ்ரீ ஸ்ரீராமஜெயம் இராம நாடகம் பாயிரம் ஏற்புடைக் கடவுள் வணக்கங்கள். அனுமார் தோத்திரம் நேரிசை வெண்பா கோதண்ட தீக்ஷா குருராம நாடகத்தைத் தீதண்டா வாறடியேன் செப்பவே - கோதண்டா மாருதியே அஞ்சனையாள் மைந்தனே நற்கருணை வாருதியே நீதுணையா வா!
தரு-1 கலியாணி ராகம் ரூபகசாப்புத் தாளம் பல்லவி துணைவந் தருள்புரிகுவாய் - அனுமந்தா நீ துணைவந் தருள்புரிகுவாய் (துணை) அநுபல்லவி துணைவந் தருள்வாய் நல்ல சொற்பொருளதுபுல்ல இணையொன்றிலாத வல்ல ராமநாடகம் சொல்ல (துணை) சரணங்கள் 1 துஷ்டவாலி தோழமையை விண்டோனே-விண்டு சுக்கிரீவன் தோழமையைக் கொண்டேனே-வெகு திட்டமா ராகவனைப் போய்க் கண்டோனே-அவன் செப்பிய சொல்லமிர்தத்தை உண்டோனே-சுக்கிரீவன் கஷ்டமும் அரசிழந்த நஷ்டமும் அவனிருப்பும் சட்டமாச் சொன்ன மாருதி இட்ட கருணை வாருதி (துணை) |