13 2 அஷ்ட திக்கில் தென்திசை உகந்தோனே-சீதைக்கா அரிய பிலத்தினுட் புகுந்தோனே-அப்போது பொட்டெனப் பூமியினைப் பிளந்தோனே-உயிரைப் போக்கவே மிகமனம் தளர்ந்தோனே-சம்பாதி எட்டவே இருந்துமென்ன கிட்டவே வரஅவற்குப் பட்டதைச் சொல்லும் தூயனே முட்டிலா ஆஞ்ச நேயனே (துணை) 3 உக்கிரமா விள்வசொரூபம் எடுத்தோனே-மயேந்திரத் துதைந்து கடலைத்தாண்டி விடுத்தோனே-பொல்லாத அக்கிரம லங்கணியைக்கீழ்ப் படுத்தோனே-நற்றிரு ஆழியைத் தேவிகையினில் கொடுத்தோனே-ஆறுபோல் மிக்கவே ரத்தங்கள் வாயால் கக்கவே ராட்சத ரெல்லாம் மக்கவே செய்யும் ருத்திரனே முக்கிய மாம்வாயு புத்திரனே (துணை) 4 தேவிசூடாமணி கையில் தரித்தோனே-சொன்ன சேதிகள்எல்லாம் அங்கி கரித்தோனே-படு பாவிராவணன் லங்கையை எரித்தோனே-ராமன் பக்கல்வந்துற்ற சேதிகள் விரித்தோனே-இந்த பூவுலகத் தோரும் தேவர் கோவும் முனிக்கணமும் ப ராவிய சிரஞ் சீவியே மேவிய என தாவியே (துணை) 5 அருமையாம் சஞ்சீவி மலையை ஏற்றோனே-பிர்ம்ம அஸ்திர வேதைக ளெல்லாம் தீர்த்தோனே-சீதையை உரிமையாம் ராகவன் பக்கல் சேர்த்தோனே-பரதன் உயிரை விடுமுன்னமே போய்க் காத்தோனே-தவத்தில் பெருமை யார்முனி விருந்தினில் தரும ராமனோ டருந்தின ஒருமையாற் சஞ்சீவி ராயனே பிரம பட்டம் பெறும்உ பாயனே (துணை) |