14 பெருமாள் தோத்திரம் விருத்தம் -1 அண்டர்தம் துயரம்தீர அயோத்திமா நகரில் வந்து தண்டகா ரணியம் சென்று சமுத்திரமீ தணையைக் கட்டி, கொண்டுரா வணனை மாட்டக் கோதண்டம் கையில் ஏந்தும் புண்டரீ கக்கண் ணாளி பொன்னடி க்கமலம் போற்றி தரு - 2 சௌராஷ்டிரா ராகம் திரிபுடைதாளம் பல்லவி எனக்குன் இருபதம் நினைக்க வரம்அருள்வாய்-ஸ்ரீராமச்சந்திரா எனக்குன் இருபதம் நினைக்க வரம்அருள்வாய் (எனக்) சரணங்கள் 1. எனக்குன் இருபதம் நினைக்கவரம் அருள் இனித்த தசரதன் தனக்குமகன் எனும் மனத்தினுடன்அவ தரித்து முனிவரன் மகத்தில் அரக்கியை வதைத்தஅரசே! (எனக்) 2. நடக்கையிலே அகலிகைக் கிருபைசெய்து நடத்திச் சனகன்வில் ஒடித்துச்சனகிகை பிடித்துப் பரசுராம மனுக்குமமதையைப் பிரித்து நகரில் வந் திருக்கும் அய்யனே (எனக்) 3. தரிக்கும் முடிபர தனுக்குதவி நதித் தடத்தில் குகனுடன் அடுத்துச்சித்திரகூட வரைக்குள் சனகியோ டிருக்கத் துணைவன்நல் வணக்கம் செயமகிழ் குணக்குஞ்சரமே (எனக்) 4. துடித்த பரதனும் ஒடுக்கமுடன் வர தொடுத்தமிதியடி கொடுத்தரசுசெய வடக்கில் அவனையும் விடுத்து நடுவிலே வனத்தில்வரும் விரா தனைக்கொன்றவனே (எனக்) 5. விடுக் கரிய சடா யுவுக்குறவு சொலி விடுத்துக்கொண்டுபஞ்ச வடிக்குச் சென்றவுடன் அடுத்த சூர்ப்பநகி கொடுத்த கரதூ ஷணத்திரிசிரர்முடி துணித்த ராகவா (எனக்) |