பக்கம் எண் :

15

6.    தனித்து வருமார்           சனைக்கொன்றொருகவந்
       தனுக்கருளி அனுமனைக்   கண்டொருசுக்ரீ
     வனுக்குதவி வாலி          தனைப்பொருதிவா
       னரப்படையைஆ        தரித்ததுரையே        (எனக்)

7.    இருக்கும் அனுமன்வந்      துரைக்க நிசிசரர்
       இருக்கை அறிந்தபின்          எரித்த கடலிலே
     பெருக்க அணைசெய்து      வருக்கம் வருக்கமா
       பெலத்த அரக்கரைத்     தொலைத்த தெய்வமே (எனக்)

8.    கொடிய இந்திரசித்தன்      பிரகஸ்தன் முதலாகக்
       கொள்ளும் மூலபல       வெள்ள அரக்கர்தம்
     முடியும் கும்பகர்ணன்       முடியும் ராவணன்
       முடியும் பொடியாக       விடுபுங் கவனே       (எனக்)

9.    நினைத்தபடி விபீ          ஷணற் கரசுபெற
       நிறுத்தி ஒருபுஷ்ப        ரதத்தில் ஏறிவந்து
     தனத்தில் உயர்தரும்        அயோத்தியிலே சிமா
       தனத்தி ருக்கும்ரகு       குலக்குமரனே        (எனக்)

*********

அபசாரக்ஷமை

விருத்தம் - 2

கனமான வால்மீகர் சுலோகம் செய்தார்
          கம்பரும் ராமாயணத்தைக் கவியாச் செய்தார்
     உனதாசை யாலேநா டகமாச் செய்தேன்
          உளறினால் என்னபலன் உண்டாம் என்றால்
     முனிமார்சொல் லியராம மந்தி ரத்தை
          மூவரும் ஓதியராம மந்தி ரத்தை
     வனவேடன் மராமார என்றே முத்தி
          வழிகண்டான் அதுகொண்டே மொழிகின் றேனே.

தரு-3

சாவேரி ராகம்                            அடதாளசாப்பு

பல்லவி

     ஐயனேரகு ராமனே என்சொல் அபசாரம்
     உபசாரம் ஆக்கிக் கொள்வாயே   (ஐய)