பக்கம் எண் :

16

அநுபல்லவி

     கையில் ஆகாதநான் ஏதேது சொன்னாலும்
     காக்கக் கடன்என் பிழையை நீக்கக்கடன்உன்பாரம்   (ஐய)

சரணங்கள்

1.    எள்ளத் தனையும்     குத்தம்
       இல்லாத சுப       சத்தம்
     தெள்ளத் தெளியேன்  மொத்தம்
       செய்தேன் இதோ   சுத்தம்  

வெள்ளைக் கவி      என்றும்-இதுசொன்ன
     பிள்ளைக் கவி       என்றும்-சொல்வதல்லால்
     விள்ளத் தகுமோ     பழுதுகள்
     உள்ளத் தகுமோ     சாமிநீ
     தள்ளத் தகுமோ     திருவுளம்
     கொள்ளத் தகுமோ   அறிகிலேன்          (ஐய)

2.    நற்பொருள்          நீதமும்
       நவரச            பேதமும்
     வைப்புள்ள          கீதமும்
       வண்ணவி         நோதமும்
     ஒப்புத்              தெரிவேனோ-அதிலுள்ள
     தப்புத்              தெரிவேனோ-இலக்கணச்
     சொற்பிக் கறியேன்    உன்புகழ்
     கற்பிக் கறியேன்      சொல்லி
     மெய்ப்பிக் கறியேன்   சாமி
     ஒப்பிக் கறியேன்      எங்கள்              (ஐய)

3.   உத்தம முனி         முன்னம்
       உரைக்கக் கம்பர்    சொன்ன
     நற்றமிழ் தன்னைச்    சின்ன
       நாடகம் ஈ         தென்ன
     வைத்திப்படிக்        கண்டேன்-பெரியோர்முன்
     புத்திப்பிழை         கொண்டேன்-என்சாமி
     பித்துச்சொல்         வைப்போலே