பக்கம் எண் :

17

     சத்திக்க ஒ           ருக்காலே
     நத்திச்சொலும்        என்மேலே
     சித்தத்தில் இ         தத்தாலே            (ஐய)

***********

நூற்பெருமை

விருத்தம் -3

சதிர்பெறும் ராம காதை சதகோடி பிரபந்த மாகும்
அதிலோர்அட் சரம்சொன் னாலும் அருவினை போகும் என்றே
விதியினால் முனிவால் மீகி விளம்பிய உறுதி கொண்டு
மதியினால் அறிந்த மாத்திரம் வகுத்துநா டகஞ்சொல் வேனே

தரு-4

சாவேரி ராகம்                            திரிபுடைதாளம்

பல்லவி

மகத்துவம் உள்ளகதை ராமகதை இதுவேகேட்க வேணும்-முனி
   வருக்கும்பலமனி தருக்கும் இதுபொதுவே           (மகத்)

அநுபல்லவி

மிகுத்த மிகுத்த புராணம் சொல்லும்     கதை
     விரும்புமோ மறுநாள் சொன்னாள் அதை
அகத்தினில் ஆனந்தம் தருமே         இதுசொல்ல
     அடிக்கடி சொல்லினும் வெறுக்கு   மோ நல்ல      (மகத்)

சரணங்கள்

1.    சேர்க்கும் பொருள்களில் என்ன இணைச்செவி
                      ஏற்கும்பொருளிது      மாத்திரம்
       செபமும் இதுபெருந் தபமும் இதுவென்று
                     தெளிவதேநல்ல        சூத்திரம்
     பார்க்குள் இதையறி யார்க்கெ லாம்பிறந்
                        தெடுத்தஉடம்பவ     பாத்திரம்
      பத்தியாலிது கற்றவர்க்குப் பலிப்பது பரமபத க்ஷேத்திரம்
       தீர்க்க மாஇதைக் கேட்பின்              றோர்பெரும்
         திருமனையில்வரு வாரே              தேவரும்