பக்கம் எண் :

18

     ஏற்கும் இதன்குணமும் யார்க்குச்   சொல்லவரும்
       இகபரங்களிற் சகல           முந்தரும்       (மகத்)

2. தருமராஜன்கை நேரும் போதினில் ஒருமையாயதைத்  தடுக்குமே  
  சற்றே படிக்கினும் புத்திரபாக்யமும் சகலபாக்யமும் அடுக்குமே    
  பெருகுநவக்கிரக ஏகாதசப் பலனைப்பிரியமுடன் வந்து கொடுக்குமே   
  பேயும்பூதமும் நோயும் சூனியமும் பிணிசெய்யாதபடி   விடுக்குமே

     மரணசெனன வியாதிதமக்        கின்னம்
          வருந்துவார் வருந்தாதபடி   தின்ன
     அரிய மருந்திது ஆமென்றே      முன்னம்
          ஆதியிலயன்சுகர் காதிலே   சொன்ன   (மகத்)

3.சீமைதனிற் கங்கையமுனைமுதற் பெருந்திவ்ய தெய்வநதி ஸ்நானமும்
    சேனைமாநிலம் யானை முதலாகச் செய்யும் பலபல   தானமும்
   ஆமிதாமென்று தேறுகின்றவே தாந்தம் முதற்கலைக்   கியானமும்
     அதுவுமல்லாமல்எது நினைந்தாலும் உதவும்அந்தநி  தானமும்

     சாமிநாரத முனிவன்சொல்லி           வைத்த
          சரித்திரம் வால்மீகர் உரைத்தபடி  கொற்ற
     ராமன் அவதாரம் ஆம்முன்னே        மெத்த
          நயங்கொண் டாதிகாவியம் என்றே பெற்ற          (மகத்)

-0-0-

அவையடக்கம்

விருத்தம்-4

     முத்துமுதல் விலையில்லா மணிகள்பெற்ற
          முதியகடல் ஆடுகின்றார் அதிலேஏழு
     சற்றும் உதவாதமணி யாம் பருக்கை
          தான்போடக் களிப்பான சமுத்திரம்போல்
     கர்த்தன்எனும் ராமச்சந்திரன் கதைப்பா கேட்கும்
          காதிலே நாடகமா அதனைச் சொல்லிக்
     குற்றமிகச் செய்தாலும் குணமாக் கொண்டு
          கூட்டுவீர் என்கவிபா ராட்டுவீரே.