பக்கம் எண் :

117

சரணங்கள்

1.    வஞ்சகம் பரதன்செய்த           கோரம்-தீர்த்தாலல்லாமல்
          வாங்குமே எனதுவங்கை     வாரம்-தேவரீரிந்த
     வஞ்சியும் நீரும்போய்ச்சற்றே      தூரம்-இருப்பீரிந்த
          மட்டுமே செய்திடும்உப     காரம்
     கொஞ்ச நேரத்திலே என்சிலை         பூட்டி
          குரைக்கும் நரிக்கு இரையாகவே   மாட்டி
     பிஞ்சிடாமல் இந்தச் சேனையைக்       கூட்டி
          பிரளய கால ருத்திரனைப் போல் மாட்டி
     நஞ்சுநஞ்சு பஞ்சு பஞ்சா              எவர்களும்
     நெஞ்சிரங்க வெஞ்சரங்களைத்          தொடுக்கிறேன் (ஒரு)

2. வண்டிலும் தேரும் கம்பல்போல்  ஆட-அதிலே ரத்த
     வாரிவெள்ளம் கரைபுரண்     டோட-எதிர்த்த மன்னர்
  மண்டைகள் மலைமலையாப்      போட-பேயும் பூதமும்
     மகிழ்ந்து கொண்டு தலைகள்பந் தாட
  அண்டொணாத பெரும்படைகள் மென்  மேலே
     ஆடிக்காற்றில் விழுஞ் சருகுகள்     போலே
  சண்டவார்கணைகள் தொடுக்கிற        தாலே
     சரிந்துநிலை குலைந் தொரு        காலே
 விண்டு விண்டு பிண்டு பிண்டு          விழவிழ
கண்ட கண்ட துண்ட துண்டம்           ஆக்கிறேன் (ஒரு)

3. ஆள்அடிமை லட்சுமணன்   தொட்ட-அம்புகள் பாய்ந்து
     ஆனைமத்தகம் பிளந்து   கொட்ட-அதில் வந்த பேர்
  வாள்எல்லாம் மீன்போல் புகுந்துகிட்ட - அந்தச் சேனையை
     வாரிக் கொண்டிரத்தம் கடல் முட்ட
  தோளும் தாளும் அறுந்துதடி          துடிக்க
     துள்ளித்துள்ளி சிலகவந்தங்கள்      நடிக்க
  மூளைச் சேற்றில் விழுந்திடுப்புகள்      வெடிக்க
     முகங்கண்டவர்க் கெல்லாம் குறளிகள் படிக்க
  வாளியாட கூளி ஆட                பலபல
     கூளி ஆட தூளி ஆட            அடிக்கிறேன் (ஒரு)