118 ஸ்ரீராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலம்பல் விருத்தம்-28 இந்தவகை சொல்லத்தம்பீ உனக்கு லோகம் ஈரேழும் நேர்ஆமோ நமக்கு பூமி தந்திடவும் வணங்கிடவும் வந்தான் கண்டாய் தம்பிபர தனும்என்னை விரோதிப் பானோ அந்தமதி விடுவிடென்னப் படையை நீக்கி அண்ணன்முன்னே பரதன்வந்து பணிந்தபோது தந்தைஉளனோ இலனோ என்றான் கேட்டான் தயங்கினான் ரகுராமன் மயங்கினானே திபதை-11 கண்டா ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. மெய்யை நிறுத்திஉன் மெய்யை விட்டுப் போனதென்ன மெய்த்தவனே-என்னைப்-பெத்தவனே கையிலே வளர்ந்தஎன்னை இப்படிக்கண் கலக்கங்கள் கண்டாயோ-என்னை-விண்டாயோ 2. வீட்டில் இருந்து முகத்தைக் காட்டுவாய் என்றிருந்தேனே வெறுத்தாயோ-என்னை-ஒறுத்தாயோ காட்டிலே போம் முன்னாக விண்நாட்டிலே நீபோ னதென்ன காரியமோ-இது-வீரியமோ 3. தத்தளிக்கும் பரதற்குப் புத்திமதி யோசனைகள் சாற்றுவையே-பயம்-மாற்றுவையே எத்தனை காரியத்துக்கும்என் கர்த்தன் இருக்கிறான் என்றே எண்ணினேனே-அவம் பண்ணினேனே 4. எண்ணும் என் உயிரிருக்க உன்உயிரை மாத்திரம் இறந்தாயோ-என்னைத்-துறந்தாயோ கண்ணுக் குற்றம் கண்ணுக்குத் தெரியா தென்று சொன்ன கதையாச்சே-நல்ல-வதையாச்சே |