119 5. இந்திரன் பழைய போல வந்துனது முன்னேமுறை இட்டானோ-குறை-பட்டானோ அந்தரத்தி லேசென்றாலும் எந்தாய் இங்கே யிருக்க ஆர்படுவார்-தேர்-யார்விடுவார் 6. என்னிரண்டு கால்மிதித்த உன்னிட மார்பும் வயிறும் இருதாளும்-உன்-இருதோளும் வன்னிதின்னக் கண்டேனே என்னைப்போல் ஒருபிள்ளை வாச்சுதல்லோ-பேய்-ஆச்சுதல்லோ 7. தள்ளரிய தாறுவந்து தாய்வாழையைக் கெடுத்த சதிதானோ-தலை-விதிதானோ பிள்ளைஎன்று நான் பிறந்து பெற்றவனைக் கொன்றான் என்று பேர்எடுத்தேன்-நல்ல-சீர்எடுத்தேன் 8. கண்ணில் எண்ணெய்க் குத்தி என்னைக் காத்துக் கொண்டிருந்துபட்டம் கட்டுமுன்னே-பலன்-கிட்டுமுன்னே வெண்ணெய் திரண்டு வரச்சே தாழி உடைந்தாற்போலே விடுத்தாயே-என்னைக்-கெடுத்தாயே 9. நாலுபேர் பிள்ளையிலும் என்மேல் உன் மானமெல்லாம் நாட்டினையே-பா-ராட்டினையே காலிலே தைத்ததுஉன் கண்ணிலே தைத்ததுபோலக் காத்தாயே இன்று-தீர்த்தாயே 10. வெந்தவனம் கடந்துன் ஊரினில் வந்தார் முகத்தில் விழிப்பேனோ-ஆரை-அழைப்பேனோ என்தன் முகந்திருத்தி உச்சிமோந்து தழுவி எடுப்பார்ஆர்-முத்தம்-கொடுப்பார்ஆர் 11. மாமந்திர சாலையும் சிங்காதனமும் ஒளி வாங்காதோ-கண்டால்-ஏங்காதோ பூமண்டலாதிபர்கள் தாம் வந்து பணியும்அம் புசபதனே-அய்யோ-தசரதனே ----- |