120 ஸ்ரீ ராமரை வதிஷ்டர் தேற்றுதல் அரசனை எண்ணி இவ்வாறழும் இராகவனை நோக்கி வரமுனி வதிஷ்டன் அங்கே மலர்க்கையால் கண்ணீர்மாற்றி விரகினால் எவரானாலும் விதியினை வெல்வாருண்டோ புரவலா கேளாய் என்று போற்றுவான் தேற்றுவானே தரு-17 முகாரி ராகம் அடதாளசாப்பு பல்லவி ராமா இப்படிநீ கிலேசிக்கல் ஆமா என் சாமீ (ராமா) அநுபல்லவி பூமான் என்னுத் தசரதன் போ கையினாலே புலம்பிப் புலம்பிக்கொண்டு குழந்தைப் பிள்ளையைப் போலே (ரா) சரணங்கள் 1. கனிந்து கண்ணீர் இறைத்தாவதுண் டோசாரம் கையால் எள்ளுந்தண்ணீரும் இறைக் கவேணும் இந்நேரம் நினைந்து பார்க்கில் இதுமகன்செய்யும் உபகாரம் நீயறியாத துண்டோ உனக்கேன் இந்த விசாரம் (ராமா) 2. புண்ணிய பாவம் இரண்டும் மெய் யென்று மனஸ்கரி பூட்டும் வாணாள் அதிற்போட்டு வைத்ததிரி உண்ணும் இவ்விரண்டிலும் உயிர் விளக் கேசரி இரண்டும் போனால் விளக்கிருக்குமோ அரிகரி (ராமா) 3. பெறுதவன்முன் எவர்க்கும் அடிக்கடி மேதினி பிராணபயம் உண்டென்று சொல்லுமேபெ ருந்தொனி அறுபதாயிரம் ஆண்டு அரசிருந் தான்தனி அதுவும் போதாதென்று அழலாமோஅ வற்கினி (ராமா) |