121 ஸ்ரீராமர் முன்னே பரதர் புலம்பல் விருத்தம்-30 அலகில்லாக் குறைநீக்கி வதிஷ்டன்தேற்ற அறிந்துகங்கா நதிமூழ்கித் தந்தைக்குள்ள குலவிதிஎல் லாம்செய்தான் சீதை தானும் குளிர்ந்தகங்கா நதிமூழ்கித் தெளிந்தபோது தலம்முழுதும் ஆளும்முடி தரிக்காய்தம்பீ சடைமுடிஏன் தரித்தாய்என் றுரைக்கக்கண்ணீர் பலபலென உதிர்ந்திடத்தன் மனதில் உள்ள படிராமன் முன்பரதன் பகருவானே திபதை-12 எதுகுலகாம்போதி ராகம் ஆதிதாளம் கண்ணிகள் 1. மன்னவன் தன்னையும் கொன்று உன்னையும் இந்தப்படி வைத்தள் வயிற்றுக்குள் ளே அவம் சென்மித்த நானல்லோ மாதவம் செய்ய வேணும் தேவா உனக்கேன் இந்த மாதவம் 2. உறவுபோலே இருந்து குளவிபோலே கொட்டி உன்னையும் போகச் சொன்னாளே படுபாவி மறுபடியும் வந்து சந்தோஷம் சொன்னாளே வைத்திருக்க வேணுமோ என்ஆவி 3. உடனாம் துணைபிரிக்க தந்தை உயிர்மரிக்க ஊரும் சிரிக்கவரம் கொண்டேனே இடறின காலிலே இடறும் என்ப தெல்லாம் என்னிடத்தில் தானே கண்டேனே 4. அருந்துணையே எனது ஐயாவே என தரசே நீபர தேசியோ பிரிந்தென்னைப் பேர்வென் றாய்பழிகார னோநான் பிள்ளை பிறந்த நேர் வாசியோ 5. உலகம் எல்லாத்தையும் நீயாளவேணும்பின் ஒருவர் ஆண்டு குறை வாங்குமோ மலைதாங்கும் பாரத்தை மலையே தாங்கவேணும் மண்ணாங் கட்டி என்ன தாங்குமோ |