பக்கம் எண் :

122

6. ஆனைமேல் இட்டபாரம்பூனைமேல் இட்டாற்போலே
     அரசாளுவதென்ன                        கோலமோ
   கானகம் நீயிருக்க நான்போய் அரசிருக்கல்
     கயைுயோ இது கலி                       காலமோ

7. தன்இனம் தன்னைக் காக்கும் வேலி பயிரைக்காக்கும்
     தப்பிதம் இல்லை இந்தப்                       படிதானே
  உன்இனம்தன்னை நீயே வந்து காத்தருள் என்னால்
     ஒன்றும் ஆகாது சொன்னேன்                   அடியேனே

8. தேவேந்திரனுக்கும் மகுடம் தரித்து வைத்த
     தெசரத மகாராசன்                             பூமியே
  நீ வேறெண்ணலாமோ நீயே வரவேணும்
     நீ ஆள வேணும் என்                         சாமியே

------

ஸ்ரீராமர் பரதருக்கு புத்தி சொல்லுதல்

விருத்தம்-31 

பரதன் இவ்வாறு கூறப் பரிந்துஸ்ரீ ராமன் தாயார்
விரதன்ஏன் விட்டாய் இந்த விரதம்ஏன் கொண்டாய் நான்போய்
தரமுடன் பதினா லாண்டும் தவஞ்செய்ய வேணும் நீபோய்த்
திரமுடன் புவிஆள் என்று தெரிவிப்பான் விவரிப்பானே.

தரு-18

சுருட்டி ராகம்                            அடதாளசாப்பு

பல்லவி

இன்னஞ் சிறுபிள்ளை போலே என்னை அழைக்கிறாய்-உன்னை
என்ன சொல்வேன் பரதாஎன் கண்ணின் மணியே        (இன்)

அநுபல்லவி

அன்னைதந்த பணிவிடையே தன்மம் என்று மதித்தேனே
அப்படிநீ மதிக்காமல் இப்படி வந்திதில்தானே           (இன்)

சரணங்கள்

1. வாய்த்தமழை விட்டுந்தூ வானவிட்டதில்லை ராமன்
     வனத்தில் வந்த பின்னும் என்ன        சொல்லையா
  நேத்தியாய்ப் பதினாலு வருஷமட்டும் சொன்னபடி
     நில்லென்றால் நில்லாமல் என்ன        தொல்லையா