பக்கம் எண் :

123

  ஏத்த தகப்பன்சொன்ன வார்த்தைகொண்டு புவியாள
     இசைத்தேனே அந்தநாள் அறிந்தாய்         அல்லையா
  மூத்தவனும் ஒருவிதத்தில் தகப்பன்ஆமே சொன்ன
     மொழிகொண்டு புவியா ளொணாதோ வல்லமை இல்லையா(இன்)

2. மத்தர்போல் பொய்யுரைத்துத் தகப்பன்வினை கட்டிக்கொள்ள
     மகனிருந்து பட்டங்கட்டிக்             கொள்ளலாமோ
  சத்தியமாய் வேதமெல்லாம் கண்கண்ட தெய்வம் என்னும்
     தாய்தகப்பன் உரைகடந்து             துள்ளலாமோ
  பத்தியாத் தவம்எனக்கும் புவிஉனக்கும் பிரிந்திருக்க
    பங்கல்லாப் பங்கை விழுந்து அள்ளலமோ
  பித்தன் அல்லடா தம்பிநீ சமர்த்தன் என்றிருந்தேனே
     பேய்ஆகிலும் பெற்றதாய் வார்த்தை     தள்ளலாமோ (இன்)

3. முன்னாக நான்கொண்டு பின்னாக அரசுனக்கு
     முறையாலே தந்தேன் என் உரை       பொய்யாமல்
  உன்னாலும் என்னாலும் சொன்னபடி நடக்கும் என்று
     உசரப்போன தசரதற்கு வசை          வையாமல்
  சின்னாபின்னங்களாய் பட்டணமும் பரிசனமும்
     சேற்றில் நட்ட கம்பம்போலே          தொய்யாமல்
  என்ஆணை தம்பிநீ உன்நாட்டை ஆளடா
     எப்படிநான் சொன்னாலும் அப்படிநீ    செய்யாமல்(இன்)

பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல்

விருத்தம்-32

    பதியெனும்ரா கவனிவ்வா றுரைக்கக்கேட்டான்
          பரதனும்சம் மதிகொண்டான் பதினால் ஆண்டாம்
    அதில்வாரா விடில்முடிவேன் என்று கொண்டான்
         அண்ணன்மிதி யடிகொண்டான் அனுப்பிக்கொண்டான்
    துதிஅயோத் தியில்புகுந்தான் நந்திக் கிராமம்
         துன்னினான் சுமந்திரன் அதிகாரஞ் செய்ய
    மிதியடிக்கு முடிதரித்தான் தெற்கே நோக்கி
         விழிக்கின்றான் தன்பழியைக் கழிக்கின்றானே.

அயோத்தியா காண்டம் முற்றிற்று.
விருத்தம்-32. திபதைகள்-12. தருக்கள்-18.
சக்கிரவர்த்தி திருமகனார் திருவடிகளே சரணம்.