125 வருத்தம் நீங்கியவ் வரம்பறு திருவினை மருவும் அருத்தியுண் டெனக்கு ஐய ஈதருளிட வேண்டும் அனைய தாதலின் அருந்துயர்ப் பெரும்பரம் அரசன் வினையின் என்வயின் வைத்தனன் எனக்கொள வேண்டா புனையும் மாமுடி புனைந்து இந்த நல்லறம் புரக்க நினையல் வேண்டும் யான், நின்வயிற் பெறுவது ஈதென்றான் (மந்திரப்படலம் 3, 14, 15, 46, 47, 61, 65, 68) ஐம்பத்தாறு தேசத்து ராஜர்களும் வருதல் விருத்தம் - 2 - தரு - 2 வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த பொன் திணிந்த தோட் டரும்பெறல் இலச்சினை போக்கி நன்று சித்திர நளிர்முடி கவித்தற்கு நல்லோய் சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப உரியமாதவன் ஒள்ளிதென்று வந்தனன் விரைந்தோர் பொருவில் தேர்மிசை அந்தணர் குழாத்தொடும் போக நிருபர் கேண்மின்கள் இராமற்கு நெறிமுறை மையினால் திருவும் பூமியும் சீதையிற் சிறந்தன என்றான் இறைவன் சொல்எனும் இன்னறவு அருந்தினர் யாரும் முறையின் நின்றிலர் முந்துறு களியிடை மூழ்கி நிறையும் நெஞ்சிடை உவகைபோய் மயிர்வழி நிமிர உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார் ஒத்தசிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் தத்தமக்கு உற்ற அரசெனத் தழைக்கின்ற மனத்தர் முத்தவெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் அத்த நன்றென அன்பினோ டறிவிப்ப தானார் மூவெழு முறைமைஎம் குலங்கள் முற்றுறப் பூவெழு மழுவினோன் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகற்கு ஆவ இவ்வுலகம் ஈது அறனென்றானரோ (மந்திரப்படலம் 72-76) |