பக்கம் எண் :

127

கூனி கைகேசியைக் கலைக்க வருதல்

விருத்தம்-4 - தரு-3

அந்நகர் அணிவுறும் அமலை வானவர்
பொன்னகர் இயல்பெனப் பொலியும் ஏல்வையில்
இன்னல்செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்னருங் கொடுமனக் கூனி தோன்றினாள்

தோன்றிய கூனியும் துடிக்கும் நெஞ்சினாள்
ஊன்றிய வெகுளியாள் உளைக்கும் உள்ளத்தாள்
கான்றெரி நயனத்தாள் கதிக்கும் சொல்லினாள்
மூன்றுல கினுக்குமோர் இடுக்கண் மூட்டுவாள்

தொண்டை வாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் வெகுளியின் மடித்த வாயினாள்
பண்டைநாள் இராகவன் பாணி வில்லுமிழ்
உண்டை உண்டதனைத்தன் உள்ளத் துன்னுவாள்
                            (மந்தரைசூழ்ச்சிப்படலம் 46, 47, 48)

கைகேசி கூனியைக் கோபித்தல்

விருத்தம்-5 - தரு-4 

ஆயபே ரன்பெனும் அளக்கர் ஆர்த்தெழ
தேய்விலா முகமதி விளங்கித் தேசுற
தூயவள் உவகைபோய் மிகுசுடர்க் கெலாம்
நாயகம் அனையதோர் மாலைநல் கினாள்

வெயில் முறைக்குலக் கதிரவன் முதலியமேலோர்
உயிர்முதல் பொருள் திறம்பினும் உரைதிறம்பா தோர்
மயில்முறைக் குலத்துரிமையை மனுமுதல் மரபைச்
செயிர்உறப் புலைச்சிந்தையால் என்சொனாய் தீயோய்

எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லைநீ தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்துஊழ் வினைதூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்

போதி என்எதிர் நின்றுநின் பொறி நாவைச்
சேதியாதிது பொறுத்தனென் புறஞ்சிலர் அறியின்