பக்கம் எண் :

128 

நீதி அல்லவும் நெறிமுறை அல்லவும் நினைந்தாய்
ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி என்றாள்
                           (மந்தரைசூழ்ச்சிப்படலம் 59, 71, 72, 74)

இதுவும் கைகேசியைக் கூனி கலைத்தல்

விருத்தம்-6 - திபதை-2

தெழித்தனள் உரப்பினள் சிறுகண் தீயுக
விழித்தனள் வைதனள் வெய்துயிர்த்தனள்
அழித்தனள் அழுதனள் அம்பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தைஅக் கொடிய கூனியே

வேதனை கூனிபின் வெகுண்டு நோக்கியே
பேதைநீ பித்திநிற் பிறந்த சேயொடும்
மாதுயர் படுகநான் நெடிதுன் மாற்றவள்
தாதியர்க்கு ஆட்செயத் தரிக்கிலேன் என்றான்

சிவந்தவாய்ச் சீதையும் கரிய செம்மலும்
நிவந்த ஆசனத் தினிதிருப்ப, நின்மகன்
அவந்தனாய் வெறிநிலத் திருக்கல் ஆனபோது
உவந்தவாறென் இதற்கு உறுதியாதென்றாள்

மறந்திலள் கோசலை உறுதி மைந்தனும்
சிறந்தனன் திருவினின் திருவின் நீங்கினான்
இறந்திலன் இருந்தனன் என்செய் தாற்றுவான்
பிறந்திலன் பரதன்நீ பெற்றதால் என்றாள்

சரதம் இப்புவியெலாம் தம்பியோடும் இவ்
வரதனே காக்குமேல் வரம்பில் காலமும்
பரதனும் இளவலும் பதியின் நீங்கிப் போய்
விரதமா தவஞ்செய விடுதல் நன்றென்றாள்

பண்ணுறு கடகரிப் பரதன் பார்மகள்
கண்ணுறு கவினராய் இனிது காத்தஅம்
மண்ணுறு முரசுடை மன்னர்மாலையில்
எண்ணுறப் பிறந்திலன் இறத்தல் நன்றென்றாள்

அரசரில் பிறந்துபின் அரசரில் வளர்ந்து
அரசரில் புகுந்துபே ரரசியானநீ