129 கரைசெயற் கருந்துயர் கடலில் வீழ்கின்றாய் உரைசெயக் கேட்கிலை உணர்தியோ என்றாள் புரியும் தன்மகன் அரசெனின் பூதலம் எல்லாம் எரியும் சிந்தனைக் கோசலைக் குரிமையாம் என்றாள் பரியும் நின்குலப் புதல்வற்கும் நினக்கும் இப்பார்மேல் உரியதுஎன் அவள் உதவிய ஒருபொருள் அல்லால் தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துனை இரந்தவர்க்கு அவளை வேண்டி ஈதியோ வெள்குதியோ விம்மல் நோயால் மாண்டு போதியோ மறுத்தியோ எங்ஙனம் வாழ்தி நாடிஒன்றுனக் குரைசெய்வேன் நளிர்மணி நகையாய் தோடிவர்ந்த தார்ச் சம்பரன் தொலைவுற்ற வேலை ஆடல் வென்றியான் அருளிய வரமவை இரண்டும் கோடி என்றனள் உள்ளமும் கோடிய கொடியாள் இருவரத்தினில் ஒன்றினால் அரசுகொண்டு இராமன் பெருவனத்திடை எழிரு பருவங்கள் பெயர்ந்து திரிதரச்செய்தி ஒன்றினால் செழுநிலமெல்லாம் ஒருவழிப்படும் உன்மகற்கு உபாயம் ஈதென்றாள் (மந்தரைசூழ்ச்சிப்படலம் 60, 65, 68, 78, 79, 88, 89) கைகேசிக்கும் சக்கிரவர்த்திக்கும் சம்வாதம் விருத்தம்-7 - திபதை-3 அடைந்தவண் நோக்கி அரந்தை என்கொல் வந்து தொடர்ந்த தெனத்துயர் கொண்டு சோரும் நெஞ்சன் மடந்தையை மானை எடுக்கும் ஆனை யேபோல் தடங்கைகள் கொண்டு தழீஇஎடுக்க லுற்றான் நின்று தொடர்ந்த நெடுங்கைதமை நீக்கி மின்துவள்கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள் ஒன்று மியம்பலள்நீடுயிர்க்க லுற்றாள் மன்றல் அருந்தொடை மன்னன்ஆவி அன்னாள் அன்னது கண்ட அலங்கல்மன்னன் அஞ்சி என்னை நிகழ்ந்ததுஇவ் ஏழுஞாலம் வாழ்வார் |