130 உன்னை இகழ்ந்தவர் மாள்வர்உற்ற தெல்லாம் சொன்னபின் என்செயல் காண்டி சொல்லிடென்றான் வண்டுளர் தாரவன் வாய்மைகேட்ட மங்கை கொண்ட நெடுங்கணின் ஆலிகொங்கை கோப்ப உண்டுகொ லாம்அருள் என்கண் உன்கண் ஒக்கின் பண்டைய இன்று பரிந்தளித்தி என்றாள் கள்ளவிழ் கோதை கருத்துணராத மன்னன் வெள்ள நெடுஞ்சுடர் மின்னின்மின்ன நக்கான் உள்ளம் உவந்தது செய்வென் ஒன்றும் உலோவேன் வள்ளல் இராமன்உன் மைந்தன் ஆணை என்றான் ஆன்றவன் அவ்வுரைகூற அன்னம் அன்னாள் தோன்றிய பேரவலம் துடைத்தல் உண்டேல் சான்றிமையோர் குலம்ஆக மன்னநீ அன்று ஏன்றவரங்கள் இரண்டும் ஈதி என்றாள் வரங்கொள இத்துணைமம்மர் அல்லர்எய்தி இரங்கிட வேண்டுவ தில்லை ஈவென் என்பால் பரங்கெட இப்பொழுதே பகர்ந்திடு என்றான் உரங்கொள் மனத்தவன் வஞ்சம் ஓர்கிலாதான் ஏய வரங்கள் இரண்டில் ஒன்றினால் என் சேய் உலகாள்வது சீதைகேள்வன் ஒன்றால் போய்வனம் ஆள்வது எனப்புகன்று நின்றாள் தீயவை யாவை யினும்சிறந்த தீயாள் இந்நிலை நின்றவள் தன்னைஎய்த நோக்கி நெய்ந்நிலை வேலவன் நீதிசைத்ததுண்டோ பொய்ந்நிலை யோர்கள் புணர்த்த வஞ்சம் உண்டோ அந்நிலை சொல் எனது ஆணை உண்மை என்றான் திசைத்ததும் இல்லை எனக்குவந்து தீயோர் இசைத்ததும் இல்லைமுன் ஈந்தஇவ் வரங்கள் குசைப்பரி யோய்தரின் இன்று கொள்வேன் அன்றேல் வசைத்திறன் நின்வயின் நிற்கமாள்வென் என்றாள் கொள்ளான் நின்சேய் இவ்வர சன்னான் கொண்டாலும் நள்ளா திந்த நானிலம் ஞாலம் தனில்என்றும் |
|
|
|