131 உள்ளார் எல்லாம் ஓதஉவக்கும் புகழ்கொள்ளாய் எள்ளா நிற்கும் வன்பழிகொண் டென்பயன் என்றான் கண்ணே வேண்டும் என்னினும் ஈயக்கடவேன் என் உள்நேர் ஆவி வேண்டினும் இன்றே உனதன்றோ பெண்ணே வண்மைக் கேகயன்மானே பெறுவாயேல் மண்ணே கொள்நீ மற்றையதொன்றும் மறவென்றான் இன்னே இன்னே பன்னியிரந்தான் இகல்வேந்தன் தன்னே ரில்லாத் தீயவள் உள்ளம் தடுமாறாள் முன்னே தந்தாய் இவ்வரம் நல்காய் முனிவாயேல் என்னே மன்னா யார்உளர் வாய்மைக் கினிஎன்றாள் நின்மகன் ஆள்வான் நீஇனிதாள்வாய் நிலமெல்லாம் உன்வயமாமே ஆளுதிதந்தேன் உரைகுன்றேன் என்மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும் நன்மகன் இந்த நாடிறவாமை நயவென்றான் மெய்யே என்றன் வேர்அற நூறும் வினைநோக்கி நையா நின்றேன் நாவு முலர்ந்தேன் நளினம்போல் கையான் இன்றென் கண்ணெதிர் நின்றும் கழிவானேல் உய்யேன் நங்காய் உன்அபயம் என்உயிர் என்றான் இரந்தான் சொல்லும் இன்னுரை கொள்ளாள் முனிவெஞ்சாள் மரந்தான் என்னும் நெஞ்சினள் நாணாள் வசைபாராள் சரந்தாழ் வில்லாய் தந்தவரத்தைத் தவிர்கஎன்றல் உரந்தான் அல்லால் நல்லற மாமோ உரைஎன்றாள் கொடியாள் இன்ன கூறினள் கூறக் குலவேந்தன் முடிசூடாமல் வெம்பரல் மொய்கா னிடைமெய்யே நெடியான் நீங்க நீங்குவென்ஆவி இனி என்னா இடியேறுண்ட மால்வரைபோல் மண்ணிடை வீழ்ந்தான் ஒன்றாநின்ற அருயிரோடும் உயர்கேள்வர் பொன்றா முன்னம் பொன்றினர் என்னும் புகழல்லால் இன்றோர் காறும் எல்வளையார்தம் இறையோரைக் கொன்றாரில்லை கொல்லுதியோ நீ கொடியாளே ஆழிப் பொற்றேர் மன்னவன் இவ்வாறயர் வெய்திப் பூழிப் பொற்றார் முழுதுமடங்கப் புரள் போதில் |
|
|
|