133 ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆளநீபோய் தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூழிவெங் கானம்நண்ணிப் புண்ணிய புனல்களாடி ஏழிரண் டாண்டில் வாஎன்றியம்பினன் அரசன்என்றாள் (கைகேயி சூழ்வினைப்படலம் 107-111) ஸ்ரீராமர் வனம் ஏகக் கைகேசியின் விடைபெறல் விருத்தம்-9 - தரு-5 தெருளுடை மனத்து மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி இருளுடை உலகந்தாங்கும் இன்னலுக்கியைந்து நின்றான் உருளுடைச் சகடம்பூண்ட உடையவன் உய்த்தகார்ஏறு அருளுடை ஒருவன்நீக்க அப்பிணி அவிழ்ந்த தொத்தான் மன்னவன் பணிஅன்றாகின் நும்பணி மறுப்பெனோ என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ என்இனி உறுதிஅப்பால் இப்பணிதலை மேற்கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன் (கைகேயி சூழ்வினைப்படலம் 113, 114) ஸ்ரீராமர் வனம் ஏகுதற்காகக் கோசலை புலம்பல் விருத்தம்-10 - திபதை-4 ஆங்கவ் வாசகம் என்னும் அனல் குழை தூங்குதன் செவியில் தொடரா முனம் ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம் வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ வஞ்ச மோமக னேஉனை மாநிலம் தஞ்ச மாகநீ தாங்கென் வாசகம் நஞ்ச மோயினி நான்உயிர் வாழ்வெனோ அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் கையைக் கையின் நெரிக்கும்தன் காதலன் வைகும் ஆலிலை அன்ன வயிற்றினை பெய்வளைத் தளிரால் பிசையும் புகை வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் |