பக்கம் எண் :

135

ஸ்ரீராமர் வனம் ஏகலைப்பற்றி லட்சுமணர் கோபம் கொளல்

விருத்தம்-12 - தரு-7 

கண்ணின் கடைத்தீஉக நெற்றியில் கற்றைநாற
விண்ணில் சுடரும்கெட மெய்யினில் நீர்விரிப்ப
உள்நிற்கும் உயிர்ப்பெனும் ஊதைபிறக்க நின்ற
அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்திஒத்தான்
 

சிங்கக் குருளைக் கிடும் தீஞ்சுலை ஊனை நாயின்
வெங்கண் சிறுகுட்டனுக் கூட்டவிரும் பினாளால்
நங்கைக்கு அறிவின் திறம்  நன்றுஇது நன்றிதென்னா
கங்கைக் கிறைவன் கடகக்கைபுடைத்து நக்கான்
 

புவிப்பாவை பரங்கெடப் போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்தவர் ஆக்கையை அண்டம்முற்றக்
குவிப்பானும் இன்றே என் கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானும் நின்றேன் இது காக்குநர் காமின் என்றான்
 

மெய்யைச் சிதைவித்து நின்மேல் முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர்நின்னை அம்மௌலி சூட்டல்
செய்யக்கருதி தடை செய்குநீர் தேவரேனும்
துய்யைச் சுடுவெங்கனலின் சுடுவான் துணிந்தேன்
 

வலக்கார்முகம் என்கையதாக அவ்வானுளோரும்
விலக்கார் அவர்வந்து விலக்கினும் என்கைவாளிக்கு
இலக்கா எரிவித்து உலகேழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலும் இன்று உனக்குயான் தரக் கோடி என்றான்
                          (நகர் நீங்குபடலம் 112, 113, 117, 123, 124) 

ஸ்ரீராமர் லட்சுமணர் கோபத்தைத் தனித்தல்

விருத்தம்-13 - தரு-8

 

மின்னொத்த சீற்றம் கனல் விட்டு விளங்கநின்ற
பொன்னொத்த மேனி புயலொத்த தடக்கை யானை
என் அத்த என்நீ இறையேனும் முனிந்தி லாதாய்
சன்னத்த னாகித் தனுஏந்துதற்கு ஏது என்றான்