136 பின்குற்றம் மண்ணும் பயக்கும் அரசு என்றல் பேணேன் முன் கொற்ற மன்னன் முடிகொள்க எனக் கொள்ள மூண்டது என்குற்றம் அன்றோ இகல் மன்னவன் குற்றம் யாதோ மின்குற்று ஒளிரும் வெய்யில் தீக்கொடு அமைந்த வேலோய் நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான் மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான் நற்றாதையும் நீ தனிநாய கன்நீ வயிற்றில் பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக் கற்றாய் இது காணுதி இன்று எனக் கைமறித்தான் முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான் வரதன் பகர்வான் வரம்பெற்றவள் தான் இவ்வையம் சரதம் உடையாள் அவள் என்தனித்தாதை செப்பப் பரதன் பெறுவான் இனியான் படைக்கின்ற செல்வம் விரதம் இதின்நல்லது வேறினியாவது என்றான் (நகர்நீங்குபடலம் 122, 128, 129, 132, 133) சுமித்திரை லட்சுமணருக்குப் புத்தி சொல்லல் விருத்தம்-14 - திபதை-5 அன்னான் அவர்தந்தன ஆதரத் தொடும் ஏந்தி இன்னா இடர்தீர்ந்து உடன் ஏகுஎன எம்பிராட்டி சொன்னால் அதுவே துணையாம் எனத்தூய நங்கை பொன்னார் அடிமேல் பணிந்தான் அவளும் புகல்வாள் ஆகாத தன்றால் உனக்கவ்வனம் இவ்வயோத்தி மாகாதல் இராமன் அம்மன்னவன் வையம் ஈந்தும் போகா உயிர்த்தாயர் நம்பூங்குழல் சீதை என்றே ஏகாய் இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் என்றாள் பின்னும் பகர்வாள் மகனே இவன் பின்செல்தம்பி என்னும் படியன்று அடியாரின் ஏவல் செய்தி மன்னும் நகர்க்கே இவன் வந்திடின் வா அதுவன்றேல் முன்னம் முடி என்றனள் வார்விழி சோர நின்றாள் (நகர்நீங்குபடலம் 145, 147) |