பக்கம் எண் :

137

ஸ்ரீராமர் பிரிதலைக் குறித்துச் சீதை இரங்கல்

விருத்தம்-15 - தரு-9 

பொருவில் எம்பி புவிபுரப் பான்புகழ்
இருவர் ஆணையும் ஏந்தினென் - இன்றுபோய்
கருவி மாமழைக் கற்றடம் கண்டுநான்
வருவென் ஈண்டு வருந்தலை என்றான்
 

நாய கன்வனம் நண்ணலுற் றான்என்றும்
மேய மண்இழந்த தான்என்றும் விம்மலள்
நீவ ருந்தலை நீங்குவென் யான்என்ற
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்
 

வல்ல ரக்கரின் மால்வரை போய்விழுந்து
அல்ல ரக்கின் உருக்கழல் காட்டதர்க்
கல்ல ரக்கும் கடுமைய அல்லநின்
சில்ல ரக்குண்ட சேவடிப் போதென்றான்
 

பரிவி கந்த மனத்தொரு பற்றிலாது
ஒருவு கின்றனை ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது ஈண்டுநின்
பிரிவி னும்சுடு மோபெருங் காடென்றாள்
                           (நகர்நீங்குபடலம் 216, 217, 220, 221) 

ஸ்ரீராமர் வனம் ஏகலால் புரசனங்கள் புலம்பல்

விருத்தம்-16 - திபதை-6 

சீரை சுற்றித் திருமகள் பின்செல
மூரி விற்கை இளையவன் முன்செல
காரை ஒத்தவன் போம்படி கண்டஅவ்
ஊரை உற்றது உணர்த்தவும் வேண்டுமோ
 

ஆரும் பின்னர் அழுதவ லித்திலர்
சோரும் சிந்தையர் யாவரும் சூழ்ந்தனர்
வீரன் முன்வனம் மேவுதும் யாம்எனா
போரென்று ஒல்லொலி கைம்மிகப் பொம்மினார்
 

(நகர்நீங்குப்படலம் 228, 229)

குறிப்பு:  இராமன் காடு செல்வான் எனக் கேட்டோர் துயரம் நகரமாந்தர்
புலம்பல் என்றபகுதியில் சில பாடல்களின் கருத்துக்கள் சில
திபதையில் ஆளப்பட்டுள்ளன.