138 சுமந்திரன் புலம்பல் விருத்தம்-17 - திபதை-7 செவ்விய குரிசில் கூறத் தேர்வலான் செப்புவான் அவ் வெவ்விய தாயின் தீய விதியினின் மேலன் போலாம் இவ்வயின் நின்னை நீக்கி இன்னுயர் தீர்ந்தே னல்லேன் அவ்வயின் அனைய காண்டற்கு அமைதலால் அளியன் என்றான் தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப் பூவியல் கானகம் புகஉய்த் தேன்என்கோ கோவினை உடன்கொடு குறுகினேன் என்கோ யாவது கூறுவேன் இரும்பின் நெஞ்சினேன் தாருடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா வாருடை முலையொடும் மதுகை மைந்தரைப் பாரிடைச் செலுத்தினேன் பழைய நண்பினேன் தேரிடை வந்தனென் தீதிலேன் என்கோ வன்புலக் கல்மன மதியில் வஞ்சனேன் என்புலப் புறஉடைந்து இரங்கும் மன்னன்பால் உன்புலக் குரியசொல் உணர்த்தச் செல்கெனோ தென்புலக் கோமகன் தூதின் செல்கெனோ நாற்றிசை மாந்தரும் நகர மக்களும் தேற்றினர் கொணர்வர்என் சிறுவன் தன்னைஎன்று ஆற்றின அரசனை ஐய வெய்யஎன் கூற்றுறழ் சொல்லினான் கொலைசெய் வேன்கொலோ அங்கிமேல் வேள்விசெய் தரிதின்பெற்றநின் சிங்கஏறு அகன்றது என்றுணர்த்தச் செல்கெனோ எங்கள்கோ மகற்கினி என்னின் கேகயன் நங்கையே கடைமுறை நல்லள் போலுமால் (சுமந்திரன் மீட்சிப்படலம் 19-24) ஸ்ரீராமர் சுமந்திரனுக்கு நீதிஓதுதல் விருத்தம் 18 - தரு-10 பிறத்தல்என் றுற்றபின் பெறுவ யாவையும் திறத்துளி உணர்வதோர் செம்மை உள்ளத்தாய் |