139 புறத்துறு பெரும்பழி பொதுவின் றெய்தலும் அறத்திணை மறத்தியோ அவலம் உண்டெனா முன்புநின் றிசைநிறீஇ முடிவு முற்றிய பின்பும் நின்று உறுதியைப் பயக்கும் பேரறம் இன்பம் வந்துறும் எனின் இனியதாய் இடைத் துன்பம் வந்துறும் எனின் துறக்கல் ஆகுமோ நிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற மறப்பயன் விளைத்திடல் வன்மை யன்றரோ இறப்பினும் திருவெலாம் இழப்ப எய்தினும் துறப்பிலர் அறம்எனல் சூரர் ஆவதே கான்புறம் சேறலின் அருமை காண்டலால் வான்பிறங் கியபுகழ் மன்னர் தொல்குலம் யான்பிறந் தறத்தினின்று இழுக்கிற் றென்னவோ ஊன்திறந் துயிரகுடித் துழலும் வேலினாய் வினைக்கரு மெய்ம்மையின் வனத்துள் விட்டனன் மனக்கரும் புதல்வனை என்றல் மன்னவன் தனக்கருந் தவமது தலைக்கொண் டேகுதல் எனக்கருந் தவம்இதற்கு இரங்கல் எந்தைநீ முனிவனை எம்பியை முறையில் நின்றரும் புனித வேதியர்க்கும் மேலஉறை புத்தேளிர்க்கும் இனியன இழைத்திஎன் றியம்பி எற்பிரி தனிமையும் தீர்த்திஎன்று உரைத்தி தன்மையால் முறைமையால் எற்பயந் தெடுத்த மூவர்க்கும் குறையிலா என்நெடும் வணக்கம் கூறிப்பின் இறைமகன் துயர்துடைத்து இருத்திமா டென்றான் மறைகளை மறந்துபோய் வனத்துள் வைகுவான் (சுமந்திரன் மீட்சிப்படலம் 27-31, 33-37) ஸ்ரீராமரை நினைந்து சக்கிரவர்த்தி புலம்பல் விருத்தம்-19 - திபதை-8 இரதம்வந் துற்ற தென்றாங் கியாவரும் இயம்ப லோடும் வரதனவந் துற்றான் என்ன மன்னனும் மயக்கந் தீர்ந்தான் புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கி விரதமா தவனைக் கண்டான் வீரன்வந் தன்னோ என்றான் |