பக்கம் எண் :

140

நாயகன் பின்னும் தன்தேர்ப் பாகனை நோக்கி நம்பி
சேயனோ அணிய னோஎன் றுரைத்தலும் தேர்வ லானும்
வேயுயர் கானில் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினான் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்
                                 (தயரதன் மோட்சப் படலம் 10, 12) 

ஸ்ரீராமரைக் குகன் தன் ஊரில் இருக்கவேண்டல்

விருத்தம்-20 - தரு-11 

பல்நந்துகு தாளம்தொரு படர்பங்கய நல்நீர்
அன்னந்துயில் வதிதண்டலை அயல்நந்துறை புளினம்
சின்னந்தரு மலர்சிந்திய செறிநந்தவனம் நன்
பொன்னுந்திய நதிகண்டுளம் மகிழ்ந்தனர் போனார்

கங்கை எனனும் கடவுள் திருநதி
தங்கி வைகும் தபோதனர் யாவரும்
எங்கள் செல்கதி வந்ததென்று ஏமுறா
அங்கண் நாயகற் காணவந்து அண்மினார்
                                           (கங்கைப்படலம் 7, 10)
 

சிந்தனை உணர்கிற்பான் சென்றனன் விரைவோடும்
தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமையெல்லாம் அருளுதிர் விடை என்னா
இந்துவின் நுதலாளொடு இளவலொடு இனிதுறா
 

விடுநனி கடிதென்றான் மெய்யுயிர் அனையானும்
முடுகினன் நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்
கடிதினின் மடஅன்னக் கதியது செலநின்றார்
இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகானார்
 

பாலுடை மொழியாளும் பகலவன் அனையானும்
சேலுடை நெடுநன்னீர் சிந்தினர் விளையாட
தோலுடை நிமிர்கோலின் துழவிய நெடுநாவாய்
காலுடை நெடுஞெண்டின் சென்றது கடிதம்மா
 

ஏவிய மொழிகேளா இழிபுனல் பொழிகண்ணான்
ஆவியும் உலைகின்றான் அடியிணை பிரிக்கலான்
காவியின் மலர்காசாக் கடல்மலை யனையானை
தேவியொடு அடிதாழாச் சிந்தனை உரைசெய்வான்