141 பொய்ம்முறை இலரேம்எம் புகலிடம் வனமேயால் கொய்ம்முறை உறுதாராய் குறைவிலெம் வலியேமால் செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை இம்முறை உறவென்ன இனிதிரு நெடிதெம்மூர் தேன்உள தினைஉண்டால் தேவரும் நுகர்தற்காம் ஊன்உள துணைநாயேம் உயிர்உள விளையாட கான்உள புனலாடக் கங்கையும் உளதன்றே நான்உள தனையும்நீ இனிதிரு நடஎம்பால் தோல்உள துகில்போலும் சுவையுள தொடர்மஞ்சம் போல்உள பரண் வைகப் புரையுள கடிதோடும் கால்உள சிலைபூணும் கையுள கலிவானின் மேல்உள பொருளேனும் விைவொடு கொணர்வேமால் (குகப்படலம் 31, 32, 33, 25-28) ஸ்ரீராமர் குகனைச் சினேகம் கொள்ளல் விருத்தம்-21 - திபதை-9 அன்னவன் உரைகேளா அமலனும் உரைநேர்வான் என்னுயிர் அனையாய்நீ இளவல்உன் இளையான் இந் நன்னுதல வள்நின்கேள் நளிர்கடல் நிலமெல்லாம் உன்னுடைய துநான்உன் உரிமையின் உளென் என்னா துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப் பின்புளது இடைமன்னும் பிரிவுளது என்உன்னேல் முன்புளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா அன்புள இனிநாம்ஓர் ஐவர்கள் உளரானேம் படருற உளன்உம்பி கான்உறை பகல்எல்லாம் இடர்உறு பகையா யோய் யான்என உரியாய்நீ சுடருறு வடிவேலோய் சொல்முறை கடவேன்யான் வடதிசை வரும் அந்நாள் நின்னுழை வருகின்றேன் அங்குள கிளைகாவற்கு அமைதியின் உளன்உம்பி இங்குள கிளைகாவற்கு யாருளர் இசையாய்நீ உன்கிளை எனதன்றோ உறுதுயர் உறல்ஆமோ என்கிளை இதுகாஎன் ஏவலின் இனிதென்றான் (குகப்படலம் 40-43) |