142 ஸ்ரீராமர் சீதைக்குச் சித்திரகூட வளங்காட்டல் விருத்தம்-22-தரு-12 வாளும் வேலும்விட் டளாயின அனையகண் மயிலே தாளின் ஏலமும் தமாலமும் தொடர்தரு சாரல் நீள மாலைய துயில்வன நீர்உண்ட கமஞ்சூல் காள மேகமும் நாகமும் தெரிகில காணாய் குருதி வாள்எனச் செவ்வரி பரந்தகண் குயிலே மருவி மால்வரை உம்பரில் குதிக்கின்ற வருடை சுருதி போல்தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப் பருதி வானவன் பசும்பரி புரைவன பாராய் வடங்கொள் பூண்முலை வனமயிலே மழைமதமா அடங்கு பேழ்வயிற் றரவுரி அமைதொறும் தொடக்கித்தடங்கள் தோறும் நின்றாடுவ தண்டலை அயோத்திநுடங்கு மாளிகைத் துகிற்கொடி நிகர்ப்பன நோக்கோய் உவரி வாயன்றிப் பாற்கடல் உதவிய அமுதேதுவரின் நீள்மணித் தடந்தொறும் இடந்தொறும் துவன்றிக்கவரி பால்நிற வால்புடை பெயர்வன கடிதின்பவள மால்வரை அருவியைப் பொருவன பாராய் சலந்தலைக் கொண்ட சீயத்தால் தனிமதக் கதமாஉலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்கலந்த முத்தென வேழமுத் திமைப்பன காணாய் உருகு காதலின் தழைகொண்டு மழலைவண்டோச்சிமுருகு நாறு செந்தேனினை முழைநின்றும் வாங்கிப்பெருகு சூல் இளம்பிடிக்கு ஒரு பிறை மருப்புயானைபருக வாயினில் கையினின் றளிப்பது பாராய் ஆடு கின்றமா மயிலினும் அழகிய குயிலேகூடு கின்றிலர் கொடிச்சியர் தம்மனம் கொதிப்பஊடு கின்றனர் கொழுநருக் குருகினர் உவக்கப்பாடு கின்றன கின்னர மிதுனங்கள் பாராய் |