143 ஒருவில் பெண்மைஎன் றுரைக்கின்ற உடலினுக் குயிரே மருவு காதலின் இனிதுடன் ஆடிய மந்தி அருவி நீர்கொடு வீசத்தான் அப்புறத் தேறிக் கருவி மாமழை உதிர்ப்பதோர் கடுவனைக் காணாய் அறைகழற்சிலை குன்றவர் அகன்புனங் காவல் பறை எடுத்தொரு கடுவன் அடிப்பது பாராய் பிறையை ஏட்டினள்பிடித்து இதற்கிது பிழைஎன்னாக் கறைதுடைக்குறு பேதைஓர் கொடிச்சியைக் காணாய் வடுவின் மாவகிர் இவையெனப் பொலிந்தகண் மயிலே இடுகு கண்ணினர் இடர்உறு மூப்பினர் ஏக நெடுகு கூனல்வால் நீட்டின உறுகுறு நெஞ்சக் கடுவன் மாதவர்க்கு அருநெறி காட்டுவ காணாய் பாந்தள் தேர்இவை பழிபடப் பரந்தபேர் அல்குல்! ஏந்து நூல்அணி மார்பினர் ஆகுதிக்கு இயையக் கூந்தல் மென்மயில் குறுகின நெடுஞ்சிறை கோலி காந்து குண்டத்தில் அடங்கெரி எமுப்புவ காணாய்! அலம்பு வார்குழல் ஆய்மயில் பெண்ணருங் கலமே நலம்பெய் வேதியர் மார்பினுக்கு இயைவுற நாடிச் சிலம்பி பஞ்சினில் சிக்கறத் தெரிந்தநூல் தேமாம் பலம்பெய் மந்திகள் உடன்வந்து கொடுப்பன பாராய் தெரிவை மார்க்கொரு கட்டளை எனச்செய் திருவே பெரிய மாக்கனி பலாக்கனி பிறங்கிய வாழை அரிய மாக்கனி கடுவன்கள் அன்புகொண் டளிப்பக் கரிய மாகிழங் ககழ்ந்தன கொணர்வன காணாய் இனைய யாவையும் ஏந்திழைக்கு இயைவன காட்டி அனைய மாதவர் அருந்தவர் எதிர்வர வணங்கி வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான் மனையில் மெய்யெனும் மாதவம் புரிந்தவன் மைந்தன் (சித்திரகூடப் படலம் 2-6, 10, 12, 14, 22, 30-32, 37) சக்கிரவர்த்தியைக் குறித்துப் பரதர் புலம்பல் விருத்தம்-23 - திபதை-10 மூண்டெழு காதலால் முளரித் தாள்தொழ வேண்டினன் எய்தினன் உள்ளம் விம்முமால் |