பக்கம் எண் :

146

அவ்வுரை கேட்டலும் அசனிஏறென
வெவ்வுரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
தெவ்வடு சிலையினாய் தேவிதம்பி என்று
இவ்விரு வோரொடும் கானத்தான் என்றாள்
 

வனத்தினன் என்றவள் இசைத்த மாற்றத்தை
நினைத்தனன் இருந்தனன் நெருப்புண் டான்என
வினைத்திறம் யாதினி விளைப்பது இன்னமும்
எனைத்துள கேட்பன துன்பம்யான் என்றான்
 

வாக்கினால் வரம்தரக் கொண்டு மைந்தனைப்
போக்கினேன் வனத்திடைப் போக்கி பார்உனக்கு
ஆக்கினேன் அன்னது பொறுக்க லாமையால்
நீக்கினான் தன்னுயிர் நேமிவேந் தென்றாள்
 

மாண்டனன் எந்தைஎன் தம்முன் மாதவம்
பூண்டனன் நின்கொடும் புணர்ப்பினால் என்றால்
கீண்டிலன் வாய்அது கேட்டும் நின்றயான்
ஆண்டனெனே அன்றோ அரசை ஆசையால்
 

நீயினம் இருந்தனை; யானும் நின்றனென்
ஏயெனும் மாத்திரத்து ஏற்று கிற்றிலேன்
ஆயவன் முனியும் என்று அஞ்சினென் அல்லால்
தாய்எனும் பெயர்எனைத் தடுக்கற் பாலதோ
 

மாளவும் உளன்ஒரு மன்னன் வன்சொலால்
மீளவும் உளன்ஒரு வீரன் மேயபார்
ஆளவும் உளன்ஒரு பரதன் ஆகினால்
கோளில அறநெறி குறைவுண் டாகுமோ
 

சுழியுடைத் தாய்சொலும் கொடிய சூழ்ச்சியால்
வழியுடைத்தாய்வரும் மரபை மாய்த்து ஒரு
பழிஉடைத் தாக்கினன் பரதன் பண்டெனும்
மொழிஉடைத் தாக்கலின் முறைமை வேறுண்டோ
 

நோயீர் அல்லீர் நுங்கண் வன்றன் உயிர் உண்டீர்
போயீரே நீர் இன்னம் இருக்கப் பெறுவீரே
மாயீர் மாயா வன்பழி தந்தீர், முலைதந்தீர்
தாயீரே நீர் இன்னும் எனக்கென் தருவீரே