147 ஒன்றும் பொய்யா மன்னனை வாயால் உயிரோடும் தின்றும் தீரா வன்பழி கொண்டீர் திருஎய்தி என்றும் நீரே வாழ உவந்தீர் அவன் ஏகக் கன்றும் தாயும் போல்வன கண்டு கழியீரே மாளும் என்றே தந்தையை உன்னான் வசைகொண்டாள் கோளும் என்னா லேஎனல் கொண்டான் அதுவன்றேல் மீளும் அன்றே என்னையும் மெய்யே உலகெல்லாம் ஆளும் என்றே போயினன் அன்றோ அரசாள்வான் உய்யா நின்றேன் இன்னமும் என்முன் உடன்வந்தோன் கையார் கல்லைப் புல்லட குண்ணக் கையேந்தி வெய்யோன் நான் சாலியின் வெண்சோறமுது என்ன நெய்யோ டுண்ண நின்றது நின்றார் நினையாரோ வில்லார் தோளான் மேவினன் வெங்கா னகம்என்ன நல்லான் அன்றே துஞ்சினன் நஞ்சே அனையாளை கொல்லேன் மாயேன் வன்பழியாலே குறைவற்றேன் அல்லேனோயான் அன்புடையார் போல் அழுகின்றேன் ஏன்றுன் பாவிக் கும்பிவயிற்றின் இடைவைகித் தோன்றும் தீராப் பாதகம் அற்றென் துயர்தீரச் சான்றும் தானே நல்லறமாக தகைஞாலம் மூன்றும் காண மாதவம் யானே முயல்கின்றேன் (பள்ளிபடைப்படலம் 57-59, 64, 70-75, 77, 79, 80, 84) பரதர் கோலாதேவிக்குச் சத்தியம் கூறுதல் விருத்தம்-25 - தரு-14 ஆண்தகை கோசலை அருகர் எய்தினன் மீண்டும்மண் இழிதர வீழ்ந்து கேழ்கிளர் காண்டகு தடக்கையின் கமலச் சீறடி பூண்டனன் கிடந்தனன் புலம்பி னானரோ எந்தைஎவ் வுலகுளான் எம்முன் யாண்டையான் வந்தது தமியென்இவ் மறுக்கம் காணவோ சிந்தையின் உறுதுயர் தீர்த்திரால் எனும் அந்தரத் தமரரும் அழுது சோரவே |