148 அடித்தளம் கண்டிலன் யான்என் ஐயனைப் படித்தலங் காவலன் பெயரற் பாலனோ பிடித்திலிர் போலும்நீர் பிழைத்திரால் எனும் பொடித்தலம் தோளுறப் புரண்டு சோர்கின்றான் கொடியவர் யாவரும் குலங்கள் வேரற நொடிகுவென் யானது நுவல்வ தெங்ஙனம் கடியவள் வயிற்றினிற் பிறந்த கள்வனேன் முடிகுவென் அருந்துயர் முடிய என்னுமால் இரதம்ஒன் றூர்ந்துபார் இருளை நீக்குமவ் வரதனில் ஒளிபெற மலர்ந்த தொல் குலம் பரதனென் றொருபழி படைத்த தென்னுமால் மரகத மலையென வளர்ந்த தோளினான் மையறு மனத்தொரு மாசுளான் அலன் செய்யனே என்பது தேறும் சிந்தையாள் கைகயர் கோமகள் இழைத்த கைதவம் ஐநீ அறிந்திலை போலுமால் என்றாள் தாளுறு குரிசில்அத் தாய்சொல் கேட்டலும் கோளுறு மடங்கலின் குமுறி விம்முவான் நாளுறு நல்லறம் நடுங்க நாவினால் சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான் அறங்கெட முயன்றவன் அருளில் நெஞ்சினன் பிறன்கடை நின்றவன் பிறரைச் சீறினோன் மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் துறந்தமா தவர்க்கருந் துன்பம் சூழ்ந்துளோன் குரவரை மகளிரை வாளின் கொன்றுளோன் புரவலன் தன்னொடும் அமரிற் புக்குடன் விரவலர் வெரிநிடை விழிக்க மீண்டுளோன் இரவலர் அருநிதி எறிந்து வௌவினோன் தாய்பசி உழந்துயிர் தளரத் தான்தனி பாய்பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும் நாயகன் படநடந் தவனும் நண்ணுமத் தீயெரி நரகத்துக் கடிது செல்கயான் |
|
|
|