149 தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கொரு கோளுற அஞ்சினன் கொடுத்த பேதையும் நாளினும் அறம்மறந் தவனும் நண்ணுறும் மீளரு நரகிடைக் கடிது வீழ்கயான் அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் மைந்தரைக் கொன்றுளோன் வழக்கில் பொய்த்துளோன் நிந்தனை தேவரை நிகழ்த்தி னோன்புகும் வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே கன்றுயிர் ஓய்ந்துகக் கறந்துபால் உண்டோன் மன்றிடைப் பிறர்பொருள் மறைத்து வௌவினோன் நன்றியை மறந்திடும் நயமில் நாவினோன் என்றிவர் உறுநாகு என்ன தகாவே ஆறுதன் னுடன்வரும் அஞ்சொல் மாதரை ஊறுகொண் டலைக்கதன் உயிர்கொண் டேகினோன் சோறுதன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன் ஏறும்அக் கதியிடை யானும் ஏறவே எஃகெறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஓஃகினன் உயிர் வளர்த்துண்ணும் ஆசையான் அஃகலில் அறநெறி யகற்றி ஒண்பொருள் வெஃகிய மன்னன்வீழ் நரகில் வீழ்கயான் அழிவரும் அரசியல் எய்தி ஆகுமென்று இழிவரு சிறுதொழில் இயற்றி ஆண்டுதன் வழிவரு தருமத்தை மறந்து மற்றொரு பழிவரு நெறிபடர் பதகன் ஆகயான் தஞ்சென ஒதுங்கினோர் தனதுபார் உளோர் எஞ்சலில் மறுக்கினோடு இரியல் போயுற வஞ்சிசென் நிறுத்தவன் வாகை மீக்கொள அஞ்சின மன்னவன் ஆக யானுமே கன்னியை அழிசெயக் கருதி னோன்குரு பன்னியை நோக்கினோன் பருகினோன் நறை பொன்னிகழ் களவினில் பொருந்தி னோன்எனும் இன்னவர் உறுகதி என்ன தாகவே |
|
|
|