152 ஆடு கொடிப்படை சாடிஅறத்தவ ரேஆள வேடு கொடுத்தது பார்எனும் இப்புகழ் மேவீரோ நாடு கொடுத்தஎன் நாயக னுக்கிவர், நாம்ஆளும் காடு கொடுக்கில ராகி எடுத்தது காணிரோ மாமுனி வார்க்குற வாகி வனத்திடை யேவாழும் கோமுனி யத்தகும் என்று மனத்திறை கொள்ளாதே ஏமுனை உற்றிடில் ஏழுகடற் படைஎன்றாலும் ஆமுனை யிற்சிறுகூழ்என இப்பொழு தாகாதோ (கங்கைகாண்படலம் 6, 7, 14, 23) லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டுகோபித்தல் விருத்தம்-27 - தரு-16 என்றெழுந்த தம்பியொடும் எழுகின்ற காதலொடும் குனறெழுந்து சென்றதெனக் குளிர்கங்கைக் கரைகுறுகி நின்றவனை நோக்கினான் திருமேனி நிலை உணர்ந்தான் துன்றுகரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண்ணென்றான் வற்கலையின் உடையானை மாசடைந்த மெய்யானை நற்கலையில் மதியென்ன நகையிழந்த முகத்தானை கற்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான் விற்கையினின் றிடைவீழ விம்முற்று நிற்கின்றான் நம்பியும்என் நாயகனை ஒக்கின்றான் அயல்நின்றான் தம்பியையும் ஒக்கின்றான் தவவேடம் தலைநின்றான் துன்பம் ஒரு முடிவில்லைத் திசைநோக்கித் தொழுகின்றான் எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பென்றான் பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும்பேர் வரத்தின் மிக்குயர் மாதவன் வைகிடம் அருத்தி கூட அணுகினன் ஆண்டவன் விருத்தி வேதிய ரோடெதிர் மேவினான் (கங்கைகாண்படலம் 28, 30, 72)ஆய காதலோடு ஐயனைக் கொண்டுதன் தூய சாலை உறைவிடம் துன்னினான் மேய சேனைக்கு அமைப்பென் விருந்தெனா தீயின் ஆகுதிச் செல்வனும் சிந்தித்தான் |