154 சூழிவெங் கடகரி துரக ராசிகள் பாழிவன் புயத்திகல் வயவர் பட்டற ஆழிவெங் குருதியால் அலைந்து வேலைகள் ஏழும்ஒன் றாகிநின்று இரைப்பக் காண்டியால் ஒருமகள் காதலின் உலகை நோய் செய்த பெருமகன் ஏவலின் பரதன் தான்பெறும் இருநிலம் ஆள்கைவிட்டு இன்றென் ஏவலால் அருநர காள்வது காண்டி ஆழியாய் வையகம் துறந்து வந்து அடவி வைகுதல் எய்தியது உனக்கென நின்னை ஈன்றவள் நைதல்கண் டுவந்தவள் நவையின் ஓங்கிய கைகயன் மகள்விழுந்து அரற்றக் காண்டியால் அரம்சுட அழல்நிமிர் அலங்கல் வேலினாய் விரைஞ்சொரு நொடியில்இவ் அனிக வேலையை உரஞ்சுடு வெடிக்கணை ஒன்றில் வென்றுமுப் புரஞ்சுடும் ஒருவனின் பொலிவென் யான்என்றான் (திருவடிசூட்டுபடலம் 6, 26-31 37-39) ஸ்ரீராமர் சக்கிரவர்த்தியைக் குறித்துப் புலம்பல் விருத்தம்-28 - திபதை -11 இலக்குவ உலகம் ஓர்ஏழும் ஏழும்நீ கலக்குவென் என்பது கருதினால் அது விலக்குவாரரிதது விளம்ப வேண்டுமோ புலக்குரித் தொருபொருள் புகலக் கேட்டியால் நங்குலத் துதித்தவர் நவையின் நீங்கினர் எங்குலப் புறுவர்கள் எண்ணில் யாவரே தங்குலத்து ஒருவுஅரும் தருமம் நீங்கினர் பொங்குலத் திரளொடு பொருத தோளினாய் எனைத்துள மறையவை இயம்பற் பாலன பனைத்திரள் கரக்கரி பரதன் செய்கையே அனைத்திறம் அல்லன அல்ல அன்னது நினைத்திலை என்வயின் நேய நெஞ்சினால் |