பக்கம் எண் :

155

பெருமகன் என்வயின் பிறந்த காதலின்
வரும்என நினைகையும் மண்ணை என்வயின்
தரும்என நினைகையும் தவிரத் தானையால்
பொரும் என நினைகையும் புலமைப் பாலதோ
 

பொன்னொடும் பொருகழல் பரதன் போந்தனன்
நன்னெடும் பெரும்படை நல்கல் அன்றியே
என்னொடும் பொரும்என இயம்பற் பாலதோ
மின்னொடும் பொருவுற விளங்கும் வேலினாய்
 

சேணுயர் தருமத்தின் தேயை செம்மையின்
ஆணியை அன்னது நினைக்கல் ஆகுமோ
பூணியல் மொய்ம்பினாய் போந்தது ஈண்டெனைக்
காணிய நீயிது பின்னும் காண்டியால்
 

கோதறத் தவஞ்செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள் நலத்தின் நீங்கினாள்
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூதெனப் பரதனும் தொழுது தோன்றினான்
 

அயாவுயிர்த் தழுகணீர் அருவி மார்பிடை
உயாவுறத் திருவுளம் உருகப் புல்லினான்
நியாயம்அத் தனைக்கும்ஓர் நிலைய மாயினான்
தயாமுதல் அறத்தினைத் தழீஇய தென்னவே

புல்லி நின்றுஅவன் புனைந்த வேடத்தைப்
பல்முறை நோக்கினான் பலவும் உன்னினான்
அல்லலின் அமுங்கினை ஐய ஆளுடை
மல்லுயர் தோளினான் வலியனோ என்றான்
 

அரியவன் உரைசெய பரதன் ஐயநின்
பிரிவெனும் பிணியினால் என்னைப் பெற்றஅக்
கரியவள் வரம்எனும் காலனால் தனக்கு
உரியமெய்ந் நிறுவிப்போய் உம்பரான் என்றான்
 

நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்
தந்தாய் தனியறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் இகல் வேந்தர் ஏறே இறந்தனையே
அந்தோ இனிவாய்மைக்கு ஆர்உளரே மற்றென்றான்