156 சொற்பெற்ற நோன்பின் துறையோன் அருள்வேண்டி நற்பெற்ற வேள்வி நவைநீங்க நீஇயற்றி எற்பெற்று நீபெற்றது இன்னுயிர் போய் நீங்கவோ கொற்பெற்ற வெற்றிக் கொலைபெற்ற கூர்வேலோய் மன்னுயிர்க்கு நல்லுரிமை மண்பாரம் நான்சுமக்க பொன்னுயிர்க்குந் தாரோய் பொறைஉயிர்த்தவாறிதுவோ உன்உயிர்க்குக் கூற்றாய் உலகாள உற்றேனோ மின்உயிர்க்கும் தீவாய் வெயிலுயிர்க்கும் வெள்வேலோய் எம்பரத்ததாக்கி அரசுரிமை இந்தியங்கள் தம்பரத்த வாக்கித் தவமிழைத்த வாறிதுவோ சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி சதமகற்கன்று அம்பரத்தின் நீங்கா அரசளித்த ஆழியாய் தேனடைந்த சோலைத் திருநாடு கைவிட்டுக் கானடைந்தேன் என்னத் தரியாது காவலநீ வானடைந்தாய் இன்னம் இருந்தேன்நான் வாழ்வுகந்தே ஊனடைந்த தெவ்வ ருயிர்அடைத்த வெள்வேலோய் வண்மையும் மானமுமேல் வானவர்க்கும் பேர்க்ககிலாத் திண்மையும் செங்கோல் நெறியும் திறம்பாத உண்மையும் எல்லாம் உடனோகொண் டேகினையே தண்மை தகைமதிக்கும் ஈத்த தனிக்குடையோய் (திருமுடிசூட்டுபடலம் 40-45, 50, 53, 54, 58-61, 63 64) ஸ்ரீராமரை வதிஷ்டர் தேற்றுதல் விருத்தம்-29 - தரு-17 துறத்தலும் நல்லறத் துறையும் அல்லது புறத்தொரு துணையிலை பொருந்தும் மன்னுயிர்க்கு இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்பதை மறத்தியோ மறைகளின் வரம்பு கண்டநீ பெறுவதன் முன்உயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுபதி னாயிரம் ஆண்டும் ஆண்டவன் இறுவது கண்டவற்கு இரங்கல் வேண்டுமோ |