157 புண்ணிய நறுநெயில் பொருவில் காலமாம் திண்ணிய திரியினில் விதியென் தீயினில் எண்ணிய விளக்கவை இரண்டும் எஞ்சினால் அண்ணலே அவிவதற்கும் ஐயம் ஆவதோ இவ்வுல கத்தினும் இடரினே கிடந்து அவ்வுல கத்தினும் நரகில் ஆழ்ந்துபின் வெவ்வினை துய்ப்பன விரிந்த யோனிகள் எவ்வள வில்செல எண்ணல் ஆகுமோ (திருவடி சூட்டுபடலம் 68, 70, 73, 74) ஸ்ரீராமர் முன்னே பரதர் புலம்பல் விருத்தம்-30 - திபதை -12 விண்ணுநீர் மொக்குகளின் விளியும் யாக்கையை எண்ணிநீ அழுங்குதல் இழுதைப் பாலதால் கண்ணின்நீர் உகுத்தலின் கண்ட தில்லை, போய் மண்ணுநீர் உகுத்திநீ மலர்க்கையால் என்றான் புக்கனன் புனலிடை மூழ்கிப் போந்தனன் தக்கநல் மறையவன் சடங்கு காட்ட தான் முக்கையின் நீர்விதி முறையின் ஈந்தனன் ஒக்கநின் றுயிர்தொறும் உணர்வு நல்குவான் வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால் சரதம் நின்னதே மகுடம் தாங்கலாய் விரத வேடம்நீ என்கொல் மேவினாய் பரத! கூறெனாப் பரிந்து கூறினான் மனக்கொன் றாதன வரத்தின் நின்னையும் நினக்கொன் றாநிலை நிறுவி நேமியான் தனைக்கொன் றாள்தரும் தனையன் ஆதலால் எனக்கொன் றாத்தவம் அடுப்பது எண்ணெனால் நோவ தாகஇவ் வுலகை நோய்செய்த பாவ காரியின் பிறந்த பாவியேன் சாவ தோர்கிலேன் தவம்செய் வேனலேன் யாவ னாகியிப் பழிநின் றேறுவேன் |