159 வரனில் உந்தைசொல் மரபினால் உடைத் தரணி நின்னதுஎன் றியைந்த தன்மையால் உரனின் நீபிறந்து உரிமை யாதலால் அரசு நின்னதே ஆள்க என்னவே மன்னவன் இருக்க வேயும் மணியணி மகுடம் சூடுக என்னயான் இயைந்த தன்னான் ஏயது மறுக்க அஞ்சி அன்னது நினைந்தும் நீஎன் ஆணையை மறுக்க லாமோ சொன்னது செய்தி ஐய துயருழந்து அயரல் என்றான் (திருவடிசூட்டுபடலம் 102, 104, 106-109, 115) பாதுகைக்குப் பரதர் பட்டாபிஷேகம் செய்தல் விருத்தம்-32 ஆம்எனில் ஏழிரண்டு ஆண்டில் ஐயநீ நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம் கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி சாம்இது சரதம்நின் ஆணை சாற்றினேன் விம்மினன் பரதனும் வேறு செய்வதொன்று இன்மையின் அரிதென எண்ணி ஏங்குவான் செம்மையின் திருவடித் தலம்தந்து ஈகென எம்மையும் தருவன இரண்டும் நல்கினான் அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் முடித்தலம் இவைஎன முறையின் சூடினான் படித்தலத் திறைஞ்சினன் பரதன் போயினான் பொடித்தலம் இலங்குறு பொலங்கொள் மேனியான் (திருவடி சூட்டு படலம் 131, 133, 134) |