161 விராதன் வதையும் துதியும் விருத்தம்-2 பொய்கலந்த விராதன் அந்த வனத்தே வந்தான் பூவைசன கியை எடுத்துக் கொண்டான், ராமன் மெய்கலந்த தம்பியும்தா னும்போர் செய்தான் விட்டிலன் என்றவர்களையும் எடுத்துக் கொண்டான் மைகலந்த தோளையிரு வோரும் வெட்டி மாய்த்திட்டார் அதம்படலால் அரக்கன் ஆங்கே கைகலந்த திய்வதே கத்தைப் பெற்றான் கதிசொல்வான் ஞானமுள்ள துதிசொல்வானே. தரு-1 பைரவி ராகம் ஆதிதாளம் பல்லவி அறிவார்யார் உன்னை - அறிவார்யார் (அறி) அநுபல்லவி அறிவார் ஆர்மா னிடன்போலே குறியாவேஷம் கொண்டதாலே சிறியேன் செய்தபிழைதன்னைக் குறியாதேராக வாஉன்னை (அறி) சரணங்கள் 1. எடுப்பானும் எவர்க்கும்இன்பம் கொடுப்பானும் குட்சியினிலே விடுப்பானும் ஆலிலைமேலே படுப்பானும் நீஆகவே பா ராட்டுவாய் கதியைக் காட்டுவாய் - உலகை சாட்டையில்லாப் பம்பரம்போல் ஆட்டுவாய் உன்மகிமையை(அறி) 2. தாயறியும் பிள்ளைதன்னைத் தாயையும் பிள்ளைஅறியும் நீயறியும்உயிர் உன்னை ஆரறியா தென்ன இந்திர சாலமோ-இதென்ன-கோலமோ-உனது காலாலே முடிந்ததனைக் கையாலே அவிழ்க்கப் போமோ (அறி) 3. அரவம் ஆகிமேல் உகந்தாய் ஒருகொம்பினாலே சுமந்தாய் சரணம் அதினால் அளந்தாய் பெருநில மங்கைமேல் வைத்த தாகமோ-இளையாள்-மேகாமோ-உன்மார்பில் ஏகமாய் இருக்கின்றவள் வேகமேசெய் யாளோஉன்னை (அறி) |